தன் ஸ்கூட்டியை
நிறுத்திவிட்டு வரும்
பர்தா அணிந்த பெண்ணை
நோக்கி ஓடிவருகிறது
உலகின் பெருமைக்குரிய நாகரிகம் ஒன்று
தனது தொன்மையான நாயகன் வெல்க
என்று முழக்கமிட்டபடி
அவர்களை நோக்கி
கைகளை ஓங்கி ஓங்கி
எதிர் முழக்கமிடுகிறாள்
அந்தப் பெண்
‘அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்’ என்று
கைகளை ஓங்கி ஓங்கி
எதிர் முழக்கமிடுகிறாள்
அந்தப் பெண்
‘அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்’ என்று
அவளுக்குப் பின்னால்
இன்னொரு உருவமொன்று
ஓடிவருகிறது
மூன்று தோட்டாக்களை நெஞ்சில் ஏந்தி
’ஹே ராம்’ என்று சொல்ல வாயெடுத்துப்
பிறகு
‘அல்லாஹூ அக்பர்’ என்று முழக்கமிட்டபடி
இன்னொரு உருவமொன்று
ஓடிவருகிறது
மூன்று தோட்டாக்களை நெஞ்சில் ஏந்தி
’ஹே ராம்’ என்று சொல்ல வாயெடுத்துப்
பிறகு
‘அல்லாஹூ அக்பர்’ என்று முழக்கமிட்டபடி
-ஆசை
(2022-ல் எழுதிய கவிதையின் மீள்பகிர்வு)
கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:
No comments:
Post a Comment