இயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது.
திருமணம் 2011இல்.
மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன்.
மின்னஞ்சல்: asaidp@gmail.com