Monday, August 18, 2014

குழந்தைகளை விட்டுவிடுங்கள்!


ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை)


குழந்தைகள் இந்த உலகத்துக்குத் தேவையற்றவர்கள் ஆகிவிட்டார்களா? கைவிடப்பட்ட காருக்குள் விளையாடப் போனபோது கதவு தாழிட்டுக்கொண்டதால் உள்ளுக்குள் சிக்கி, மூச்சுத் திணறி நான்கு குழந்தைகள் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மேற்கண்ட கேள்விதான் என்னுள் எழுந்தது.

Wednesday, August 6, 2014

வண்ணச் சட்டை யானை
சிந்து

(குழந்தைகளுக்காக என் மனைவி சிந்து எழுதிய கதை. ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் வெளியாகியிருக்கிறது.)


ஒரு ஊருல வளவன்னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு ஒரு கையி ரொம்பச் சின்னதா, வளைஞ்சு இருக்கும். அதனால அவன யாருமே வெளையாட்டுக்குச் சேத்துக்க மாட்டாங்க. அதை நெனைச்சு பல தடவை வளவன் அழுதிருக்கான். அப்புறம் யாரோடயும் சேராம தானாவே வெளையாட ஆரம்பிச்சான்.

பாலஸ்தீனக் கவிதை: பழிக்குப் பழி

தாஹா முகம்மது அலி(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கவிதை. ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)


சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…
என் அப்பாவைக் கொன்று
எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி
குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய
அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று
சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.

யூதர்களாகிய நமக்கு என்னவாயிற்று?


டேவிட் ஷுல்மன்

(‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகப் பிரத்தியேகமாக எழுதிய கட்டுரை. தமிழில்: ஆசை)எங்கெங்கும் இசைவில்லாத சூழல். தலைசுற்றுகிறது. டெக்குவாவில் உள்ள பிரதான சாலை ஒன்றிலிருந்து, தள்ளி அமைந்திருக்கும் ஃபெலாஃபெல் கடை அது (ஃபெலாஃபெல்: உருண்டையாக இருக்கும் ஒரு வகை தின்பண்டம்). கடையிலுள்ள சுவரின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் செய்திகள் அரபி மொழியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காஸாவைப் பற்றிய செய்திகள். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கும் பெண் ஒருத்தியைக் காட்டுகிறார்கள்; அவள் முகமெல்லாம் சின்னச் சின்னதாக ஏராளமான காயங்கள்; சில காயங்கள் மிகவும் மோசம்; அநேகமாக வெடிகுண்டுச் சிதறலால் ஏற்பட்டிருக்கலாம். அவளால் பேச முடியவில்லை; தூங்கித் தூங்கி விழுவதுபோல் தெரிகிறது (அது தூக்கம்தான் என்றும், மரணம் இல்லை என்றும் நம்புவோம்). அவளுக்கு அருகே, இரண்டு வயதுக் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கிறது. நம்பிக்கையை இழந்து, தன் தாயின் கையைப் பற்றியபடி, அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே அழுகிறது.

Monday, August 4, 2014

நான் 'ஆசை' ஆனது எப்படி?சிறு வயதிலிருந்து எனக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது பெரிய கனவு. அதுவும் சத்யஜித் ரே, மகேந்திரன், பாலு மகேந்திரா மாதிரியான இயக்குநராக ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு இருந்தது கனவு மட்டும்தான் அந்தக் கனவைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய திறமையும் துணிச்சலும் எனக்கு இல்லை என்பதை க்ரியா ராமகிருஷ்ணன் எனக்குப் புரிய வைத்தார். அது மட்டுமல்லாமல் மொழியும் இலக்கியமும்தான் என்னுடைய உண்மையான தளம் என்பதைக் கண்டுபிடித்து அதில் செயல்படுவதற்கான ஊக்கமும் அளித்தார். என் வாழ்க்கை அங்கிருந்துதான் புதிய தடத்தில் செல்ல ஆரம்பித்தது.

மௌனி: தமிழின் வசீகரக் கனவு

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மௌனியின் 107-வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம். ‘தி இந்து’ கட்டுரையை இந்த இணைப்பில் படிக்கலாம்: http://tamil.thehindu.com/general/literature/மௌனி-தமிழின்-வசீகரக்-கனவு/article6274985.ece)


ஆசை

மௌனியின் கதைகளில் முதன்முறையாக நுழையும் ஒருவருக்குக் கிடைப்பது பாழடைந்த ஒரு வீட்டுக்குள் நுழையும் உணர்வுதான். அந்தக் கால முறைப்படி அமைந்த வீடு; உயர்ந்த திண்ணைகள், நீண்ட ஆளோடி, விசாலமான கூடம், முற்றம், தானே காற்றில் அசைந்துகொண்டிருக்கும் ஊஞ்சல். உங்களுக்கு மூச்சுமுட்டும். வெளியே ஓடிவிடத் தோன்றும்.

காலங்களில் அவன் வசந்தம்!
ஆசை


அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எல்லாம் E=mc2 மயம்டேவிட் பொடானிஸ்

E=mc2 என்ற சூத்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 1904-ம் ஆண்டுக்கு நாம் போக வேண்டும். ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்கு அப்போது 25 வயது. அவர் இன்னும் பிரபலமாக ஆகியிருக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர்களுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவர்களைக் கோபமுறச் செய்தவர் அவர்.

அரசால் முடியாது என்று நாமே நம்புவதுதான் பிரச்சினை! - அமர்தியா சென் நேர்காணல்

(‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஆசை)

அடிப்படையில் தன்மதிப்பு உள்ள எந்த நாடும் மருத்துவப் பராமரிப்பு என்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்று கருதிவந்திருக்கிறது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த நேர்காணலிலிருந்து…
வேலை செய்வதற்கான உரிமை, உணவு பெறுவதற்கான உரிமை ஆகியவற்றுக்குப் பிறகு, இந்தியாவில் மருத்துவப் பராமரிப்பு பெறுவதற்கான உரிமைக்காகச் சட்டம் இயற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக! நாம் இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

புலம்பெயர்வு பெரும் நெருக்கடியாக மாறும் - சஞ்சய் சுப்பிரமண்யம் நேர்காணல்


வைஜு நரவாணே

(தமிழில்: ஆசை)


வரலாற்றாசிரியர், பேராசிரியர் சஞ்சய் சுப்பிரமண்யம் சமீபத்தில் ‘கலெஜ் தெ பிரான்ஸ்’-ல் ‘தொடக்கக் கால நவீன உலக வரலாற்றுத் துறை’க்கான இருக்கைப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது நேர்காணலிலிருந்து…
நவீனத்துவத்தின் வரலாற்றாசிரியர் நீங்கள். எந்த மாதிரியான மாறுதல்களையும் தலைகீழ் மாற்றங்களையும் நாம் தற்போது காண்கிறோம்?
அரசியலைப் பொறுத்தவரை நிறைய மாறுதல்களும் தலைகீழ் மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. எனது ஆய்வுக்கு நான் உட்படுத்தியிருக்கும் 17-வது நூற்றாண்டின் உலகம் என்பது இன்னமும் முடியாட்சிகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது.

மாபெரும் ஜனநாயகத்தின் மகத்தான நிகழ்வு
ஜவாஹர்லால் நேரு

(தமிழில்: ஆசை)


உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா. அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், நாமும் தயாராக வேண்டும் அல்லவா? இதோ, தொடங்கிவிட்டது 16-வது மக்களவைத் தேர்தலுக்கான ‘தி இந்து’வின் சிறப்புப் பக்கம்.
நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக நம் முன்னோர்கள் பட்ட பாட்டை ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, நம் கண்ணீரால் காத்தோம்’ என்ற வரிகளின் மூலம் நினைவுகூர்கிறோம் அல்லவா, சுதந்திரத்துக்கு மட்டும் அல்ல; ஜனநாயகத்துக்கும் அந்த வரிகள் அப்படியே பொருந்தும். இன்றைக்கு 18 வயதான ஒவ்வொரு குடிமகனுக்கும் கையில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் வாக்குச்சீட்டுக்குப் பின் உள்ள சரித்திரம் சாதாரணமானதல்ல.
நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால்தானே இன்றைய நாளின் சுகம் புரியும்? நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாட்டின் முதல் தேர்தல்பற்றியும் ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களைப் பற்றியும் 22.11.1951 அன்று ஆற்றிய இந்த உரையுடன் ஜனநாயகத் திருவிழாவைத் தொடங்குகிறோம். இனி, தேர்தல் முடியும் வரை திங்கள் முதல் வெள்ளி வரை நடுப்பக்கங்களின் ஒரு பக்கம் திருவிழாவை உங்களோடு கொண்டாடும்!

இருவேறு இந்தியா சொல்லும் சேதி

ஜான் பில்ஜர்

(தி கார்டியன், தமிழில்: ஆசை)

மும்பையின் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணக்காரக் குழந்தைகள் ‘ஆ… ஊ…’ என்று சத்தமிட்டபடி ஒளிந்து பிடித்து விளையாடுகின்றன. இந்த இடத்துக்கு அருகில் இருக்கும், நிகழ்த்துக்கலைகளுக்கான தேசிய மையத்தில் நடக்கவிருக்கும் மும்பை இலக்கிய விழாவுக்காக எல்லாரும் வந்துகொண்டிருந்தனர். பிரபலமான எழுத்தாளர்களும் இந்தியாவின் செல்வாக்கு மிக்க வர்க்கத்தின் பிரபலங்களும்தான் அவர்கள். நடைபாதையின் குறுக்கே படுத்திருக்கும் ஒரு பெண்ணை மிதித்துவிடாமல் லாவகமாகத் தாண்டிச் செல்கிறார்கள். விற்பனைக்காக அந்தப் பெண் வைத்திருக்கும் துடைப்பங்கள் நடைபாதையில் கிடக்கின்றன. அந்தப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளின் உருவங்கள், அவர்களுக்கு வீடாக மாறியிருக்கும் ஆலமரத்துக்குக் கீழே தெரிகின்றன.

கண்காணிப்பின் அரசியல்

(‘தி இந்து’ தலையங்கம்)

அமெரிக்காவின் தகவல் சேகரிப்பு வேட்டையைப் பற்றி மேலும் ஒரு முக்கியமான விஷயம் இப்போது அம்பலமாகியிருக்கிறது:
‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’, ‘யாஹூ’, ‘ஃபேஸ்புக்’, ‘லிங்க்டுஇன்’, ‘டம்ப்ளர்’ ஆகிய நிறுவனங்களிடம் அவர்களுடைய வாடிக்கை யாளர்கள்/ பயனர்கள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசிடம் அளிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பிலிருந்து எத்தனை முறை ஆணை அனுப்பப்பட்டது என்கிற தகவல்.

இதுதான் நமக்கான தருணம்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

(தமிழில்: ஆசை)

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலின்போது பஞ்சாப் மாநிலத்தில் 28.10.1951 அன்று ஆற்றிய உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:


நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு நமக்கென்று சில அரசியல் அதிகாரங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது, பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் மூலமாகச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் நமக்கேயான பிரதிநிதிகளை நாம் அனுப்ப முடியும். ஆனால், இந்த உரிமையை எல்லாம் கொத்திச்செல்ல நிறைய கட்சிகள் கழுகுபோல் காத்திருக்கின்றன. நம்முடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தங்களுடைய கைக்கூலிகளை நம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடச் செய்வதற்கு அவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

மனிதநேயத்துக்கும் போருக்கும் எந்த வேறுபாடும் இல்லை: அனிலா தௌலத்ஸாய் நேர்காணல்


மீனா மேனன்

(தமிழில்: ஆசை)


‘காபூலில் விதவைகள் நிலை, பராமரிப்பு ஆகியவற்றின் மானுடவரைவியல்’ இதுதான் மானுடவியலாளர் அனிலா தௌலத்ஸாயின் முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி. தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தையும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய பணிகள், காபுல் வாழ்க்கை, தொடர் போர்களால் சீரழிந்துபோன ஆப்கன் மக்களின் வாழ்க்கை, அந்நிய நிதியுதவியோடு நடக்கும் உள்நோக்கமுள்ள உதவித்திட்டங்கள் போன்றவற்றைப் பற்றி ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொள்கிறார்.
ஆப்கானிஸ்தானை உங்களுடைய ஆய்வுக்களமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?
தொடர்ச்சியான போர்கள் ஆப்கன் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு கவனத்துடன் ஆவணப்படுத்த விரும்பினேன். மானுடவியல்தான் இதற்கு மிகவும் பொருத்தமான துறை என்பதை நான் உணர்ந்தேன்.

பாலு மகேந்திரா ஒரு நினைவுகூரல்ஆசை

(‘மூன்றாம் பிறை’யின் இறுதிக்காட்சியில் நிராதரவாகக் கமல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது ‘சுப்பிரமணிக்குட்டி’ நாய்க்குட்டியின் நினைவு ஏனோ வந்தது. 

அந்த இறுதிக் காட்சியின் தாக்கத்தில் 2005-ல் எழுதிய கவிதைஇது. எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ (2006) புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பாலு மகேந்திராவுக்குச் சமர்ப்பணம் செய்யும் அளவுக்கெல்லாம் தகுதியில்லை என்றாலும் ஒரு நினைவுகூரல்.)

காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்


ஆசை

வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்தில் யார் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்று பார்ப்போமா?

இந்த தினத்தின் பெயர்

ஆசை

எருக்கஞ்செடியில்
தேன்சிட்டு
பார்த்துக்கொண்டிருந்த
உன்னிடம் கேட்டேன்

கூகுளில் வேலை வேண்டுமா?

பால் க்ரூக்மன்

(தமிழில்: ஆசை)

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார். பாக் சாதாரண ஆளில்லை. உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி. அந்தப் பேட்டியில் அவர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறினார், “வேலைக்கு ஆள் எடுக்கும்போது ஜி.பி.ஏ-வும் (தரத்தின் அடிப்படையிலான மதிப்பெண் சராசரி) தேர்வு மதிப்பெண்களும் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை. அவை நமக்கு எதையும் சொல்வதில்லை” என்கிறார் அவர்.

ஐன்ஸ்டைன்: ஒளியின் கடவுள்

ஐன்ஸ்டைன் பிறந்த நாள் அன்று (14.03.2014) ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தலையங்கம்


ஒளிக்கு இணையாகப் பயணித்தோம் என்றால், அப்போது ஒளி எப்படித் தோற்றமளிக்கும்?’ என்ற சந்தேகம் 16 வயது ஐன்ஸ்டைனுக்கு ஏற்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தச் சந்தேகம் அவர் மனதைப் போட்டு அரித்துக்கொண்டிருந்தது.

போர்களின் இலக்கு குழந்தைகள்தானா?ஸ்டீவன் ஹாக்கிங்

(தமிழில்: ஆசை)


இந்தப் பிரபஞ்சம் அனாதி காலமாக இருந்துவருகிறது என்று கிரேக்கத் தத்துவவாதி அரிஸ்டாட்டில் நம்பினார். ‘‘மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்’’ என்றார் அவர். ஏனெனில், அவையெல்லாம் மனித நாகரிகத்தை மறுபடியும் மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டுசெல்கின்றன.