ராவணேசுவரனுக்கு
மொத்தம்
பத்துக் குகைகள்
போயொளிய
தோதான இடங்கள்
ஒன்றொன்றாயும்
ஒளிந்தான்
அனைத்திலும்
ஒரே சமயம்
ஒளிந்தான்
தேடிவரும் அஸ்திரமெல்லாம்
இன்றுபோய்
நாளை வந்தன
எந்தக் குகை
ராவணக் குகையென்று
அறியவில்லை ஏதும்
எந்த அஸ்திரத்தில்
ராமன் ஒளிந்திருக்கிறான்
என்பதையறிவான்
ராவணேச்வரன்
போக்கெல்லாம்
அதுவரையே
காட்ட முடியும்
எடுத்தான்
விடுத்தான் ராமன்
ஒளிவில்
வெளிப்பட்டுத்
தடுத்தான்
படுத்தான்
ராவணன்
குகையும்
அஸ்திரமும்
பரஸ்பரம்
மிகச் சரியாய்
அறிந்தன
அவ்வறிதலே
பிரம்மாஸ்திரம்
தேடிவரும் அஸ்திரமெல்லாம்
இன்றுபோய்
நாளை வந்தன
எந்தக் குகை
ராவணக் குகையென்று
அறியவில்லை ஏதும்
எந்த அஸ்திரத்தில்
ராமன் ஒளிந்திருக்கிறான்
என்பதையறிவான்
ராவணேச்வரன்
போக்கெல்லாம்
அதுவரையே
காட்ட முடியும்
எடுத்தான்
விடுத்தான் ராமன்
ஒளிவில்
வெளிப்பட்டுத்
தடுத்தான்
படுத்தான்
ராவணன்
குகையும்
அஸ்திரமும்
பரஸ்பரம்
மிகச் சரியாய்
அறிந்தன
அவ்வறிதலே
பிரம்மாஸ்திரம்
-ஆசை
கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:
No comments:
Post a Comment