Thursday, October 22, 2026

சூழலியல் அக்கறையின் புதிய சொல்லாடல்


 
சு. தியடோர் பாஸ்கரன்

எழுத்தறிவு போன்று சூழலியல் கரிசனம் என்பது  நம் எல்லாருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இன்று அது மக்களிடம் இருந்து விலகி இருக்கிறது. படித்தவர்களும்  வசதி படைத்தவரும் இது யார் வீட்டுக் கல்யாணமோ என்றிருக்கிறோம்.. சூழலியல் கரிசனம் ஒரு பாடமல்ல. அது ஒரு விழிப்பு.  ஒரு பார்வைக் கோணம். நாம் வாழும் உலகைப் பற்றி ஒரு அடிப்படையான புரிதல். இது  நமது வாழ்வாதரம் பற்றியது.  நம்முடன் இந்த உலகில் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றியும்,  ஒரு பெரிய சிலந்தி வலையைப்போல எப்படி எல்லா உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைப்பு கொண்டுள்ளன என்பதைப் பற்றியும் உணர்த்தக் கூடிய ஒரு கருத்தாக்கம் அது.