Thursday, January 25, 2024

ஒரு வேண்டுகோள்!

அனைவருக்கும் வணக்கம்! பெரும் ஊடகங்களுக்கும் இலக்கிய அதிகார மையங்களுக்கும் இடையே தனிநபர் தனது எழுத்துகளை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பது மிகவும் கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது மட்டுமல்லாமல் பெரும் ஊடகத்தில் பணியாற்றியிருந்தாலும் அந்தச் சூழல் தந்திருக்கக்கூடிய சிறு அதிகாரத்தைக் கூட என் தனிப்பட்ட நலன்களுக்காகவோ இலக்கிய நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தியதில்லை. ஆகவே தனிநபராக அதே நேரத்தில் அனைவருடன் நட்பாகவும் பாரபட்சமில்லாத அணுகுமுறையுடனும் தொடர்ந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 

மிகவும் கடினமான காரியம்தான். ஆனால்...

ங்கே எதற்கெடுத்தாலும் ஆன்மாவை அடகுவைக்க வேண்டியிருக்கிறது. தமிழர்கள் வாழ்க்கையில் இலக்கியத்துக்கான இடம் மிகவும் குறைவாக இருக்கிறது. அந்தச் சிறு இடத்தையும் இலக்கிய உலகின் 'ஜாம்பவான்களும்' திருவுருக்களும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். ஆகவேதான் எப்பாடுபட்டாவது எனக்கென்று ஒரு சிறு வெளியை உருவாக்கத் துடித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப் போல பலரும் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, என் செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து ஆதரிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதன்படி என் வாட்ஸ்அப் சானலில் இணைவதற்கான லிங்க்கை இந்தப் பதிவின் கீழ் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அவசியம் இதில் இணையும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், எத்தனை நண்பர்களுக்கு முடியுமோ அத்தனை நண்பர்களுக்கு அனுப்பி இணையும்படி கேட்டுக்கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். 

என் கருத்துகளில் படைப்புகளில் நீங்கள் பிழைகளோ குறைகளோ கண்டால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். விமர்சன மதிப்பீடு தொலைந்துபோய் பரஸ்பரம் பாராட்டிக்கொள்ளும் மனப்பான்மையே இன்றைய தமிழ் இலக்கியச் சூழலின் நச்சுத்தன்மைக்குக் காரணம் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன. ஆகவே, அந்தத் தவறை நானும் நிச்சயம் செய்ய மாட்டேன். வாருங்கள் சேர்ந்தே ஒரு ஆரோக்கியமான மரபை வளர்த்தெடுக்கப்போம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுக்கு மேல் பதிவிடப்படாது என்று உறுதிகூறுகிறேன். அதேபோல் தங்களுக்கு விருப்பமில்லாத சூழலில் இந்த விலகிச் சென்றாலும் நான் அதை நிச்சயம் மதிப்பேன். பேராதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்🙏❤

      - அன்புடன்
        ஆசை

வாட்ஸ்அப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதற்கான லிங்க்:

https://www.whatsapp.com/channel/0029VaL3aa330LKPE548Ls2a?fbclid=IwAR3LD433gf1SDgYllChf_rVxGXdnGb85-SpZW37g-_wtptUzb1VTRgDOB9k


No comments:

Post a Comment