இவ்வளவு சின்ன சாட்டையுடன்
இவ்வளவு சின்னப் பையனைப் பார்ப்பது
இதுதான் முதல் முறை
வெறுமனே தோளில் போட்டுக்கொண்டு
சாலையோரம் புகைப்பிடிப்பவர்களைப் போய்த்
தொட்டுத் தொட்டுத்
தன் கையைத்
தன் தாடைக்கருகில்
சடங்குபோல் கொண்டுசெல்கிறான்
பக்கத்திலேயே
அவன் அம்மா
தோளில் அழுக்குத் துணியில்
தூளி கட்டி
ஒரு ஆண் குழந்தையுடன்
அதற்கென்றும்
ஒரு குட்டிச் சாட்டை
தக்க தருணத்தில்
வழங்கப்படும்
அது எந்தக் கருவறைக்குள்
சுருண்டு
தூங்குகிறதோ
-ஆசை
No comments:
Post a Comment