ஏறக்கண்டு
அதன் வாலைப் பிடித்துக்கொண்டால்
இறுதி நொடியில்
பிடித்துக்கொள்கிறான் ஒருவன்
துடித்து அறுந்து
கீழே விழுந்த வாலுடன்
அவனும் துடிக்கிறான்
வாலைத் திரும்பிப் பார்க்காமல்
மேலே போய்விட்ட
பல்லிக்கு
இன்னும் கொஞ்ச நாளில்
இன்னொரு வால்
முளைத்துவிடும்
கீழே துடிக்கும் வாலின்
முன்முனையில்
இன்னொரு பல்லி
ஒருபோதும் முளைக்காது
துடிப்பவனே
-ஆசை
நிகனோர் பர்ராவுக்கு
No comments:
Post a Comment