இன்றும் 50வது கவிதை நிறைவு செய்திருக்கிறேன். நவீன கவிதை வரலாற்றில் ஒருநாள் சாதனையாகக் கருதப்படும் பெர்னாண்டோ பெஸ்ஸோவாவின் 30 கவிதைகள் என்ற எண்ணிக்கையை இந்த வாரம் நான்கு முறை தாண்டியிருக்கிறேன். தமிழ் என்பதால் சாரு நிவேதிதா கூறியதுபோல் இதெல்லாம் சாதனைக் கணக்கில் வராது. மேலும் நாம் யாருக்கும் சமமானவர்கள் இல்லை என்ற தாழ்வுணர்ச்சியில் வாழ்ந்து சாக வேண்டும். எனக்கு இனி எது பற்றியும் கவலையில்லை. தமிழின் மிக மிகச் சிறந்த கவிஞர்களுள் ஒருவன் நான் என்ற எண்ணத்தை, தன்னம்பிக்கையை இரண்டு வாரக் கவிதைகளும் சென்ற ஆண்டு எழுதத் தொடங்கிய காவியமும் கொடுத்திருக்கின்றன. நான் இனி வாழ்வேன்!
எனினும் உடல் நலனைக் கருத்தில் கொண்டு 6 நாட்களில் 225 கவிதைகள் என்ற எண்ணிக்கையோடு தற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறேன். எல்லோருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!
No comments:
Post a Comment