(இந்தக் கவிதை முழுக்க முழுக்க கற்பனையே)
பார் ரத ரத்தினம்!
ரதம் சென்ற திசையெலாம்
ரதம் பதித்த
முத்தொளிக்
குத்திக் கிழிக்கக் கண்டாய்
ரதம் சென்ற முடுக்கெல்லாம்
ரத்தினத்தின்
இதம் கொண்ட ஒளி
வதம் செய்யக் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
பதித்திட்ட ரதமது
கொதித்திட்ட
ரத்தம் சுமந்து
இடிக்கவும்
இடித்ததைக்
கிடத்தவும் கண்டாய்
ஊர் உலகெலாம்
வெடித்திடத்
துடித்திடக் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
ரத்தின வணிகர்கள்
அதன்பின்
அதன்மீதேறி
உச்சியமர்ந்து
புத்துலகு செய்து
புத்துலகாளக் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
ரத்தினக் களஞ்சியத்தின்
குப்பை மூலையில்
மிஞ்சிய ஒளிதின்று
துஞ்சிய நிலையும் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
அதற்கொரு மறுதருணம்
அப்போதெடுத்திட்டுத்
துடைத்திட்டு
அதன் மேல்
பதித்திட்டார்
பார் ரத ரத்தினம்
மற்றுமொன்று
அடடா
அத்துவான
வெளியில்
என்றென்றும்
தித்தித்திருக்கும்
ஒளிசெய்குதே
-ஆசை
No comments:
Post a Comment