Saturday, November 12, 2016

டெல்லி: உடனடி விஷம்! சென்னை: மெல்லக் கொல்லும் விஷம்!


நித்யானந்த் ஜெயராமன்

('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 12-11-2016 அன்று என்  மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)   

இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, இந்த மாத இறுதியில் நான் மேற்கொள்ளவிருந்த புதுடெல்லி பயணத்தை ரத்து செய்தேன். டெல்லியின் மாசுபட்ட காற்றால் எனது ஒவ்வாமை அதிகரித்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். ஒரு இடம் ரொம்பவும் மாசுபட்டுள்ளது என்பதற்காக, ஒரு பயணத்தை நான் ரத்துசெய்திருப்பது இதுவே முதல்முறை. சூழலியல் இதழாளராகவும் செயல்பாட்டாளராகவும் என் வாழ்க்கை முழுவதும் இதற்கு நேரெதிரான விஷயத்தையே செய்திருக்கிறேன். ஆசியாவிலேயே மிகவும் மாசடைந்த இடங்களுக்குத்தான் நான் அதிகம் பயணம் செய்திருக்கிறேன்.
ஆனால், இந்தக் குளிர்காலத்தில் டெல்லி ரொம்பவும் பயங்கரமாகிவிட்டது, எனக்கும்கூட. நவம்பர் 9-ம் தேதி காலை 9 மணிக்குப் பி.எம். (நுண்தூசி) 2.5-ன் அளவு கனாட் பிளேஸில் 982.6 மைக்ரோகிராம்/கனமீட்டர் என்ற அளவில் இருந்தது. பாதுகாப்பு அளவு என்று இந்தியா நிர்ணயித்திருக்கும் அளவைவிட இது 16 மடங்கு அதிகம்; உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளபடி இது 100 மடங்குக்கும் அதிகம்.

Tuesday, November 8, 2016

மொழியின் பெயர் பெண்! - பிக்குனிகளின் பாடல்
(உலகப் பெண் கவிஞர்கள் பற்றிய தொடர் ஒன்றை ‘தி இந்து’ இதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘பெண் இன்று’வில் எழுதிவருகிறேன். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என்று வரும் தொடர் இது. இதன் முதல் அத்தியாயத்தின் முழு வடிவம், இங்கே. பிரசுரிக்கப்படாத மொழிபெயர்ப்பும் இங்கு இடம்பெறுகிறது.)

ஆசை

எல்லாத் துறைகளிலும் ஆண்கள் ஆதிக்கம் காணப்படுவதைப் போல கவிதைகளைப் பொறுத்தவரையிலும் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகம். கல்வியறிவு பெறுவது, திறமைகளை வெளிப்படுத்துவது போன்றவற்றைச் செய்ய விடாமல் பெண்களை எல்லாச் சமூகத்திலும் ஆண்கள் தடுத்தே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம். ஆனாலும், கிடைக்கும் சிறு இடத்திலும் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்தே வருகிறார்கள்.

Monday, November 7, 2016

கமல் என்றொரு பித்தர்


ஆசை
 (கமலின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ இணையதளத்தில் இன்று வெளியாகியிருக்கும் பெருங்கட்டுரை) 

எந்த ஒரு கலைக்கும் ஆதாரமாக ஒரு பித்து நிலை இருக்கும்அது கலை மீதுகொண்ட பித்து மட்டுமல்லஅந்தக் கலைஞருக்கு இயல்பாகவே இருக்கும்ஒரு பித்தும் கூடஅதுதான் கலையில் வெளிப்படுகிறதுவெறிஉத்வேகம்,உன்மத்தம்கலை போதைகலகக் கூறுகள்மரபை மீறுதல்வழக்கத்துக்குமாறாகச் சிந்தித்தல்தாகம்நிராசை எல்லாம் கலந்ததுதான் இந்தப் பித்துநிலை.

சார்லி சாப்ளினை எடுத்துக்கொள்ளுங்கள்அவரது ‘சிட்டி லைட்ஸ்’ படத்தின்தொடக்கத்தில் ஒரு முக்கியமான காட்சி வரும்கண் தெரியாத கதாநாயகிபோக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில் பூவிற்றுக்கொண்டிருப்பார்சாலையின்   ஏழை நாடோடியான சாப்ளின்வாகனங்களையெல்லாம் தாண்டி சாலையைக் கடக்க வேண்டும்இந்தக்காட்சியின் மூலம் சாப்ளின் ஒரு பணக்காரர் என்ற உணர்வு அந்தக்கதாநாயகிக்கு ஏற்பட வேண்டும்சாப்ளின் ஏதேதோ செய்துபார்த்தார்.இரண்டே நிமிடங்கள் வரும் அந்தக் காட்சிக்காக 342 ஷாட்டுகள் எடுத்தார்சாப்ளின்பல நாட்களுக்குப் பிறகு அமைந்ததுதான் படத்தில் இருக்கும் அந்தஷாட்சாலையைக் கடக்க முடியாமல் கார் ஒன்றுக்குள் நுழைந்து வெளிவந்துகாரின் கதவைச் சாத்தும்போது அந்த சத்தத்தை வைத்து யாரோ ஒருபணக்காரர் காரிலிருந்து இறங்குகிறார் என்று நினைத்துக்கொண்டு அந்தப்பெண் அவரிடம் பூ வாங்கச் சொல்வாள்பிழைக்கத் தெரிந்தவர்கள்,சாதுர்யமானவர்கள் இந்தக் காட்சிக்காக அவ்வளவு நாட்களையும்படச்சுருள்களையும் அவற்றுக்கான பணத்தையும் இப்படி இறைப்பார்களா?அதுதான் சாப்ளினின் பித்துபித்து நிலை சுழன்றாடி உச்சத்தில் பிறக்கும்கலைதான் எப்போதும் உன்னதமாக இருக்கும்சாப்ளினுடன் யாரையுமேஒப்பிட முடியாதென்றாலும் கமலும் அந்த வரிசையில் ஒரு பித்துநிலைக்கலைஞன்தான்.

கமல்,உங்களிடமிருந்து எங்களுக்கு நிறைய வேண்டும்!


ஆசை

(கமல் செவாலியே விருது பெற்றதை முன்னிட்டு ‘தி இந்து’வின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் 26.08.2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் முதன்முறையாகப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.)

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததிலிருந்து இன்று வரை தனது கலையுலக வாழ்க்கையில் 57 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் கமல். தமிழில் கதாநாயகனாக அவர் முதன்முதலில் நடித்தஅபூர்வ ராகங்கள்வெளியாகி 42 ஆண்டுகள் ஆகின்றன. தேசிய விருது தொடங்கி செவாலியே விருது வரை பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நீண்ட கலைப்பயணம் மேற்கொண்ட ஒரு படைப்பாளியாக அவரைத் தொகுத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. கடந்த 40 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாகவும் கலை முயற்சிகளைச் செய்துவருபவராகவும் ஒரே நேரத்தில் விளங்குகிறார். தமிழில் இது ஓர் அபூர்வமான கலவை. இந்திய சினிமாவில் கமலுக்குப் பிறகு அப்படியொரு ஆளுமையாக உருவெடுத்திருப்பவர் ஆமிர் கான். முன்னோடிக் கலைஞர் என்ற நிலையை சிவாஜி இருக்கும் காலத்திலேயே கமல் அடைந்துவிட்டிருந்தார். அவரது சாதனைகள், விருதுகள், வெற்றிதோல்வி எல்லாம் கடந்து கமலைப் பார்க்கும்போது அவரே சொல்வதுபோல்அவர் செய்ய வேண்டியது இனிதான் நிறைய உள்ளதுஎன்றே சொல்லத் தோன்றுகிறது.

தொழில்நுட்பம், கலை என்று எல்லாவற்றிலும் எண்ணற்ற பரிசோதனை முயற்சிகளை அவர் செய்துபார்த்திருக்கிறார். என்றாலும் ஒரு உலக சினிமா ரசிகரை அவர் எந்த அளவுக்குத் திருப்திபடுத்தியிருக்கிறார் என்ற கேள்வியும் மிக முக்கியமான ஒன்று. தன்னை வெறும் மசாலாப் படக் கலைஞராக அவரோ அவரது ரசிகர்களோ கருதிக்கொண்டிருந்தார்கள் என்றால் நமக்குப் பிரச்சினையே இல்லை. உலக நாயகன், உலகத் தரத்தை நோக்கி தமிழ் சினிமாவைக் கொண்டுசெல்பவர் என்றே அவரது ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார்.

கமல் என்றொரு ‘ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்!’


ஆசை
(கமல் செவாலியே விருது பெற்றபோது ‘தி இந்து’வின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 26-08-2016 அன்று வெளியான எனது கட்டுரையை முதன்முறையாக எனது வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்)

தமிழ் சினிமாவில்ஸ்டைல்என்றாலே பலருக்கும் ரஜினியின் பெயர்தான் நினைவில் வரும். நடிப்பு ரீதியில் ரஜினிக்கும் முன்பு சிவாஜி, எம்.ஆர். ராதா ஆகியோர் ஸ்டைலில் முக்கியமானவர்கள். ரஜினியின் சமகாலத்தில் கமல் நடிப்பில் மட்டுமல்லாமல் தோற்றத்திலும் பல்வேறு ஸ்டைல்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்து அதன் மூலம் தமிழர்களின் வாழ்க்கையில் ஊடுருவியவர். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் பெரும்பாலான கல்லூரி மாணவிகளுக்குப் பிடித்தமான நடிகர் கமல்தான் என்பதற்கு அவர் தனது தோற்றத்தில் காட்டிய ஸ்டைல் முக்கியக் காரணம் என்றே சொல்ல வேண்டும்.

தமிழில்அபூர்வ ராகம்காலத்தில் கமல் கதாநாயகனாக அறிமுகமானார். உடை, தோற்றத்தில் முந்தைய காலகட்டத்தின் நடிகர்களைவிட பெருமளவில் மாறுபட்டிருந்தாலும் அவரது ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் தொடங்கியதுசிவப்பு ரோஜாக்கள்படத்திலிருந்துதான். கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்து ‘16 வயதினிலேபடத்தையும் கிராமத்துப் பின்னணியில் இயக்கி, அதில் கமலை கோவணத்துடன் நடிக்கவும் வைத்த பாரதிராஜாவின் மூன்றாவது படம்தான்சிவப்பு ரோஜாக்கள்’. தமிழ்த் திரைப்பட உலகைப் பொறுத்தவரை நம்பவே முடியாத வகையில் நவநாகரிகமாக எடுக்கப்பட்ட படம் அது. பெல்பாட்டம், கூலிங் கிளாஸ், தொங்கு மீசை என்று கமலின் தோற்றம் அன்றைய இளைஞர்களை (முக்கியமாக, இளம் பெண்களை) சொக்கவைத்தார் கமல். அந்த பெல்பாட்டத்துடன், கொடூரமான பார்வையை கூலிங் கிளாஸைத் தாண்டியும் வெளிப்படுத்தி மெதுவாக நடந்துவரும் கமலை மறக்க முடியுமா?