காலம்சென்ற எங்கள் அப்பாவு தேசிகாமணிக்கு இன்று 83-வது பிறந்தநாள். அப்பாவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நான் எழுதிய ‘மாயக்குடமுருட்டி’ (எதிர் வெளியீடு, 2025) காவியத்தின் முதல் படலத்தை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Sunday, September 21, 2025
மாயக்குடமுருட்டி - அப்பாவின் பிறந்தநாள் பகிர்வு
Thursday, September 18, 2025
என் பிறந்தநாளில் புதிய புத்தக அறிவிப்பு!
இன்றுடன் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ’கொண்டலாத்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அது முழுக்க முழுக்கப் பறவைகள் பற்றிய கவிதைகள் அடங்கிய முதல் நவீனக் கவிதை தொகுப்பாகும். இன்று அதே நாளில் ஒரு புதிய புத்தகத்தைப் பற்றிய அறிவிப்பையும் அதன் அட்டைப் படத்தையும் வெளியிடுகிறேன். சுற்றுச்சூழல் தொடர்பான எனது கட்டுரைகளின் தொகுப்பு ‘அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது’ என்ற தலைப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நூலை வெளியிடுபவர் ‘உயிர்’ பதிப்பகத்தின் தோழர் சண்முகாநந்தம். நண்பர்கள் இந்த நூலுக்குப் பெரும் வரவேற்பு கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Saturday, July 26, 2025
கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்? - ஸ்டேன்லி கூப்ரிக் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
ஆசை
(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)
**
நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.
கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்
இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்
குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்
**
1.
சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.
நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.
“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான்.
அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.
“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”
Wednesday, April 23, 2025
50% சிறப்பு விலையில் என் நூல்களும் மகிழ் ஆதன் நூல்களும்!
அனைவருக்கும் உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள்! இத்தருணத்தை முன்னிட்டு எனது கவிதைத் தொகுப்புகளும், குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதைத் தொகுப்புகளும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். (தனியாகவும் மொத்தமாகவும் உண்டு). இந்தச் சலுகை ஏப்ரல் 30 வரை மட்டுமே. இந்தத் திட்டத்துக்குப் பேராதரவு தரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். விவரங்கள் மேலே உள்ள படத்தில்!
Monday, March 24, 2025
குவாண்டம் செல்ஃபி
Thursday, March 20, 2025
ஊழிமனக் காட்சி
Saturday, March 8, 2025
மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?
பகுதி-1
இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Friday, February 14, 2025
Thursday, February 13, 2025
காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!
Saturday, February 1, 2025
கன்னடத்தில் என் கவிதை
எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.


.png)







