Thursday, April 20, 2017

பிரமிளின் கவித்துவம்: நிலைத்து எரியும் சோதி


ஆசை

(பிரமிளின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘தி இந்து’ தமிழில் முழுப்பக்க நினைவுகூரல் செய்திருந்தோம். அதில் நான் எழுதிய கட்டுரை இது)

பொது வாசகருக்கு பிரமிளை அறிமுகப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. பொது வாசகருடைய மனோபாவம், எளிமை என்ற ஒற்றை அளவீட்டை மையப்படுத்தியே இருப்பதால்தான் இந்தப் பிரச்சினை.

தமிழின் சாதனைகளாக நாம் முன்வைக்கும் சங்கப் பாடல்களிலிருந்து ஆரம்பித்து, திருமந்திரம், கம்பராமாயணம், திவ்யப்பிரபந்தம், சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், பாரதியார் கவிதைகள் வரை எல்லாவற்றிலும் எளிமையான கவிதைகளைப் போலவே எளிமை இல்லாத, சிடுக்குகள் அதிகம்கொண்ட கவிதைகளும் ஏராளம் என்பதை நாம் உணர வேண்டும்.
வாசகரின் தளத்தைத் தாண்டி, ஒரு கவிஞர் எங்கெங்கோ பாய்ந்திருப்பார் அல்லவா? அந்தப் பாய்ச்சலைப் பின்தொடரும் வாசகருக்கு மட்டுமே அந்தக் கவிஞருக்கு நிகரான அனுபவங்கள் சாத்தியமாகுமே ஒழிய, படைப்பைத் தனது அறிவின் அளவுகோலைக் கொண்டு அளந்துபார்க்கும் வாசகருக்கு அது சாத்தியம் ஆகாது. பிரமிளைப் போன்ற ஒரு கவிஞரை அணுகும்போது ஒரு வாசகர் மனதில் கொள்ள வேண்டியது அதுதான்.

ஆங்கிலக் கவிதைகளையும் விமர்சனக் கவிதைகளையும் தவிர்த்து, 131 கவிதைகளை மட்டுமே பிரமிள் எழுதியிருக்கிறார். ஆனாலும், பாரதிக்குப் பிறகு நவீனத் தமிழ்க் கவிதையில் மிக முக்கியமான கவிஞராகக் கருதப்படுகிறார். சங்கக் கவிதைகள், கம்பராமாயணம் போன்றவற்றைப் படித்த ஒருவர் பாரதியை அந்த அளவுக்கு வைக்க மாட்டார் எனினும் பாய்வதற்குத் தயாரான புலி என்ற அளவிலாவது பாரதியைக் கருதுவார்.

பாரதியின் காலத்துக்குப் பிந்தைய தமிழ்க் கவிதை, பாய்வதைப் பற்றிய சிந்தனைகளை விடுத்து சிறு நடையில் திருப்திப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வகையில் பார்த்தால், பிரமிள் ஒருவர்தான் தனித்து நிற்கிறார். பாய்வதைப் பற்றிய சிந்தனைகளைக் கொண்டிருந்தவர் அவர் ஒருவர்தான்.
‘காலம் விரித்த திரையா?/ வாழ்வு ஓடும் படமா?’ என்பது போன்ற மேலோட்டமான தத்துவக் கவிதைகளை ஆரம்பத்தில் பிரமிள் அதிகம் எழுதினார். சிறிது காலம் கழித்து அவர் எழுதிய E=MC2 என்ற கவிதை அவருடைய வேகம் கூடுவதை உணர்த்தியது. ‘ஒளியின் கதியை/ ஒளியின் கதியால்/ பெருக்கிய வேகம்/ ஜடத்தைப் புணர்ந்தால்/ ஜடமே சக்தி!’ என்ற வரிகள் மூலம் ஐன்ஸ்டீனின் E=MC2 கோட்பாட்டுக்குக் கவிதை உருக் கொடுத்தார் பிரமிள். தமிழில் அறிவியல் கவிதை என்ற வகைமைக்கு அநேகமாக இந்தக் கவிதையை மட்டுமே சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

அதற்குப் பிறகு நவீனத் தமிழின் முக்கியமான கவிதைகள் சிலவற்றை எழுதினார். எண்ணிக்கை என்ற அளவீட்டில் வைத்துப் பார்க்காமல், அந்தக் கவிதைகள் பறந்திருக்கும் உயரத்தை மட்டுமே வைத்துப் பார்க்க வேண்டும். 24 சிறுகதைகளை மட்டுமே எழுதியிருக்கும் மௌனியை நாம் மகத்தான சாதனையாளராகக் கருதுவதைப் போல பிரமிளையும் நாம் கருத வேண்டும். அசாதாரணமான நடை, தொனி ஆகியவற்றின் காரணமாக பிரமிளை ‘கவிதையுலகின் மௌனி’என்றுகூடச் சொல்லலாம். பிரதியெடுக்க முடியாத நடைக்குச் சொந்தக்காரர்கள் தமிழில் இந்த இருவர் மட்டும்தான்.

சொல்வளம்
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு கருவி இருப்பதுபோல படைப்புக்கான கருவி மொழிதான். ஆனால், அந்தக் கருவி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைப் பெரும்பாலான கவிஞர்களிடம் எளிதில் நாம் கண்டுணர முடியும். சாதாரணக் கவிஞர்கள், ஏற்கெனவே இருக்கும் சொற்களைப் பயன்படுத்திப் பயன்படுத்தித் தேய்த்துவிடுவார்கள் என்றால், மகத்தான கவிஞர்கள் புதிய சொற்களையும் சொற்சேர்க்கைகளையும் உருவாக்குவார்கள். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் உருவாக்கிய சொற்களுக்காக அகராதிகளெல்லாம் உண்டு.

20-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை, தமிழில் புதிய, அழகிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிய கவிஞர்களென்று பாரதி, கண்ணதாசன், பிரமிள் ஆகிய மூவரை மட்டுமே குறிப்பிட முடியும். ‘காலநடை, நிலவூறித் ததும்பும் விழி, நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள், அக்கினிக் குஞ்சு’ என்று பாரதியின் பல்வேறு சொற்சேர்க்கைகள் அழகும் வீச்சும் கூடியவை.

பிரமிளின் சொற்சேர்க்கைகளும், சொற்களின் பயன்பாடுகளும் அப்படித்தான். ‘மனோவேளை, உதரக்கோது, காற்றின் குருட்டு விரல்கள், காலாதீதம், விடிகாலையின் வெற்றுமணல், தலைகீழ்க் கருஞ்சுடர், கைப்பிடியளவு கடல், காற்றின் தீராத பக்கங்கள், கணத்தின் மொக்கு, அணுத் தான்யத்தின் பகிரங்கம், மின்நதி, சர்ப்பச் சுருணை, தானற்ற வெண்மை, துயிலற்ற மௌனம், இமை கொட்டாத இக்கணம்’ என்று அவரது சிறிய படைப்புலகத்துக்குள்ளும் ஏராளமான சொற்சேர்க்கைகள் சிதறிக்கிடக்கின்றன.

இந்தச் சொற்சேர்க்கைகள் வலிந்து உருவாக்கப்படுபவையல்ல. கவித்துவத்தின் தெறிப்புதான் இவை. உரைநடையில் ஒரு சில வரிகள் நீளும் விஷயங்களை, உணர்வுகளை இந்தச் சொற்சேர்க்கைகள் சுருக்கமாகவும் ஆழமாகவும் உணர்த்திவிடுகின்றன. மேலும், சப்தநயத்தால் இந்தச் சொற்சேர்க்கைகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.

ரத்தினங்கள்
பிரமிளின் முக்கியமான கவிதைகள் பலவும் விளக்க முடியாதவை. உணர்ச்சியின் தீவிரத்தில் அடுக்கடுக்கான படிமங்களையும் சொற்பிரயோகங்களையும் கொண்டவை. எனவே, தீவிரம் கூடியவை. ஆரம்ப நிலை வாசகருக்கு அந்தக் கவிதைகள் பெரும் சிரமத்தைக் கொடுக்கக் கூடியவை.

சற்று முயன்றால் அவர்களுக்கு அற்புதங்களைப் பரிசளிக்கக் கூடியவை அந்தக் கவிதைகள். எளிய வாசகர்களையும் ஈர்க்கும் விதத்திலான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து எடுத்துக்காட்டாகச் சில வரிகள்: ‘நக்ஷத்ரங்களைவிட/ நிறையவே பேசுவது/ அவற்றின் இடையுள்ள/ இருள்’ (ஊமை), ‘சொற்கள் நிலவு வட்டம்/ ஊடே/ சூரியனாய் நிலைத்(து) எரியும்/ சோதி ஒன்று வருகிறது’(அறைகூவல்), ‘விரல்கள் வில் நீத்த அம்பாய் நடுங்க/ பரிதியின் விரித்த கையிலிருந்து/ ஒரு மழைத்துளி பிறக்கிறாள்./ முகத்தில் வைரத்தின் தீவிரம். அவள் மூளையில் ஒரு வானவில். (அற்புதம்), ‘திசையெங்கும்/ ஒரே ஒரு மலர்/ பூக்கும் பேரோலி.’ (கோதம-இந்ரம்).

பிரமிள் தன் கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது ‘விலை மதிக்க முடியாத ரத்தினங்கள்’என்று குறிப்பிட்டார். ஆனால், இந்த ரத்தினங்கள் லௌகீக மதிப்பு இல்லாதவை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். கவிஞர் தேவதேவனின் கூற்றுக்கொப்ப கவிதையால் லௌகீகத்தை மதிப்பிட முடியும். ஆனால், லௌகீகத்தால் கவிதையை ஒருபோதும் மதிப்பிட முடியாது. இதற்கு பிரமிளின் ரத்தினங்கள்தான் எடுத்துக்காட்டு!
 - நன்றி: ‘தி இந்து’

Wednesday, April 19, 2017

சம்பாரண் ஏன் காந்திக்கும் நமக்கும் அவ்வளவு முக்கியமானது?


ராமசந்திர குஹா

(சம்பாரண் நூற்றாண்டை முன்னிட்டு 19-04-2017 அன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் இன்று வெளியான கட்டுரை)

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வாரத்தில்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வடக்கு பிஹாரின் சம்பாரண் மாவட்டத்துக்கு வருகை புரிந்தார். அந்த மாவட்டத்தில் பல மாதங்கள் அவர் இருந்தார்; ஆங்கிலேயரின் வற்புறுத்தலின் பேரில், தங்கள் விருப்பத்துக்கு மாறாக அவுரி விவசாயத்தை அங்குள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிவந்ததால், அவர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். ஆங்கிலேயரின் வற்புறுத்தலுக்கு அடிபணியாத விவசாயிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. காந்தி, பல மாதங்கள் அங்கு தங்கி இந்தப் பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய்ந்தார்.

தனது தலையீடுகளின் மூலம் காந்தி, ஆங்கில அரசிடமிருந்து விவசாயிகளுக்குக் கணிசமான நிவாரணத்தையும் சலுகைகளையும் பெற்றுத்தந்தார். குத்தகைத் தொகை பெருமளவு குறைக்கப்பட்டது, கட்டாயமாக அவுரி விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையிலிருந்து, விருப்பமிருந்தால் செய்யலாம் என்ற நடைமுறை வழக்கத்துக்கு வந்தது. விவசாயிகளைப் பொறுத்தவரை இது பெரும் வெற்றி; காந்திக்கும் இது முக்கியமான ஒரு வெற்றி. ஏனெனில், (தென்னாப்பிரிக்காவைப் போலவே) இந்தியாவுக்குள்ளும் காந்தி ஒரு வெற்றிகரமான தலைவர் என்ற நம்பிக்கையை சம்பாரண் வெற்றிதான் உறுதிப்படுத்தியது.

எனது இந்தக் கட்டுரையின் நோக்கம், சம்பாரண் போராட்டத்தின் வரலாற்றையும் அது குறித்த தகவல்களையும் ஒப்பிப்பது அல்ல. சம்பாரண் பகுதியில் காந்தி தங்கியிருந்த காலப் பகுதியின் முக்கியமான ஆறு அம்சங்களை இந்தக் கட்டுரை அடையாளம் காண்கிறது. மேலும், இந்தியாவில் எதிர்காலத்தில் காந்தி மேற்கொள்ளவிருந்த பணிகளின் திசையை இந்த சம்பாரண் போராட்டம் எப்படித் தீர்மானித்தது என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரை பேசுகிறது. தனது தாய்நாட்டு விவசாயிகளுடன் காந்திக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் சம்பாரணில்தான் முதன்முதலில் கிடைத்தது. போர்பந்தர், ராஜ்கோட் போன்ற பேரூர்களில் சிறுபிராயத்தைக் கழித்தவர் அவர். இளம் வழக்கறிஞராக பாம்பே மாநகராட்சியில் தொழில் புரிந்தார். அடுத்தது, தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் வாழ்ந்தார்.

விவசாய இந்தியா…
1915-ல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, இந்தியா முழுவதும் நிறைய இடங்களுக்குப் பயணம் செய்த காந்தி, சம்பாரணுக்கு வருவதற்கு முன்பு, பெரிதும் நகரம் சார்ந்த, பேரூர் சார்ந்த மக்களுடனே உரையாடியிருக்கிறார்.சம்பாரணில், அந்த மாவட்டத்தின் இரண்டு பிரதான ஊர்களான மோத்திஹரியிலும் பேத்தையாவிலும் காந்தி தங்கியிருந்து தன் செயல்பாடுகளை மேற்கொண்டார். காலையிலிருந்து மாலைவரை தன்னைப் பார்ப்பதற்காக அலைமோதியபடி வந்துகொண்டிருந்த ஏராளமானோரை அவர் சந்தித்தார். சில நாட்களில் அவராகவே கிராமங்களுக்குச் சென்றுவருவார். ஏராளமான விவசாயிகளை காந்தி சந்தித்தார். கூடவே, ஐரோப்பியத் தோட்ட முதலாளிகளையும் தொழிற்சாலை மேலாளர்களையும் அவர் சந்தித்தார். அவர் எங்கு சென்றாலும் சாதாரண உடையிலிருந்த காவலர்கள் பின்தொடர்ந்தார்கள். மக்கள் நடுவே காந்தி பேசுவதையெல்லாம் அந்தக் காவலர்கள் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்.

தனது வழக்கப்படியே, காந்தி மிகவும் கடுமையாக உழைத்தார். 1917, மே மாத இறுதியின்போது அந்த மாவட்டத்தில் அவர் ஆறு வாரங்களைச் செலவழித்திருந்தார். கிட்டத்தட்ட 7,000 நேரடி வாக்குமூலங்களை அவர் சேகரித்திருந்தார். ஒவ்வொரு வாக்குமூலமும் சம்பாரணில் விவசாயிகள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள், எப்படிக் கடுமையாக அவர்கள் உழைத்தார்கள் என்பதைப் பற்றிய காந்தியின் புரிதலை மேலும் ஆழமாக்கியது.

சம்பாரணில்தான் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை காந்தி நேரடியாகவும் உரிய முறையிலும் அறிந்துகொண்டார். இரண்டாவதாக, பிற்காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்கவிருந்த சகாக்களை முதன்முறையாக ஒருங்கிணைத்தது சம்பாரணில்தான்.

சிந்திக்காரரும் ஒடிசலாக, உயரமாக இருந்தவருமான ஜே.பி.கிருபளானி என்ற அறிஞரின் நட்பை சம்பாரணில்தான் காந்தி புதுப்பித்துக்கொண்டார். 1915-ல் சாந்திநிகேதனில் இருவரும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டார்கள். 1917 ஏப்ரல் வாக்கில் சம்பாரண் மாவட்டத்தில் இருந்த ஒரு அரசுக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக ஜே.பி. கிருபளானி இருந்தார். முஸாஃபர்புர் ரயில் நிலையத்துக்கு காந்தி வந்திறங்கியபோது, கிருபளானி அங்கே தன் மாணவர்கள் புடைசூழ காந்தியைச் சந்தித்தார். ஆர்வ மிகுதியால் அவரது மாணவர்கள் ஒரு வண்டியில் காந்தியை உட்கார வைத்து இழுத்துச் சென்றார்கள்.

ஜே.பி. கிருபளானியும் பாட்னாவைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் குழுவொன்றும் காந்திக்குத் துணையாக சம்பாரணில் தங்கியிருந்தார்கள். இவர்களில் பிரஜ்கிஷோர் பிரசாதும் உள்ளடக்கம். சம்பாரண் விவசாயிகள் பிரச்சினை குறித்து அவர் வெகு காலமாக அக்கறை காட்டிவந்தவர். மற்றொருவர், ராஜேந்திர பிரசாத். கல்கத்தாவில் படித்தவர். திறமையான வழக்கறிஞராகப் பெயர்வாங்க ஆரம்பித்திருந்தவர். இவர்கள் எல்லோருமே அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலும் காந்தியுடனே அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

மூன்றாவதாக, சம்பாரணில் காந்தி ஆற்றிய பணிகள் முதன்முறையாக அவரது சொந்தப் பிரதேசமான குஜராத்துக்கு வெளியில் (வெகுதொலைவில்) அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தன. காந்தியுடன் அங்கு பணியாற்றிய வழக்கறிஞர்களும் காந்தி பேசிய விவசாயிகளும் மிகுந்த மதிப்பு மரியாதையுடனும் இருந்தார்கள். ‘இங்கு நான் ஆற்றும் காரியமானது ஒவ்வொரு நாளும் எனக்கு மென்மேலும் மகிழ்ச்சியூட்டுகிறது’ என்று காந்தி தனது நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினார். “நான் சரியானதைத்தான் செய்வேன் என்று என் மேல் நம்பிக்கை கொண்டபடி, அவர்கள் வெறுமனே என்னைச் சுற்றி அமர்ந்திருப்பதன் மூலம் உவகை கொள்கிறார்கள். இந்த அன்புக்குத் தகுதியானவனாக நான் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.”

படேலும் இன்ன பிற குஜராத்திகளும்
நான்காவதாக, சம்பாரணில் அவர் பாடுபட்டதுதான் குஜராத்தில் அவருக்கு இருந்த நற்பெயரை வலுப்படுத்தியது. ‘1917-க்கு முன்பு குஜராத்திகள் மிகவும் பழமைவாதிகள் என்றும் மந்தமானவர்கள் என்று தேசியவாதிகள் மத்தியில் பெயரெடுத்திருந்தனர்’ என்று வரலாற்றாசிரியர் டேவிட் ஹார்டிமன் எழுதுகிறார். குஜராத் சபா என்பது மிதவாத வழக்கறிஞர்களாலும் ஆங்கிலேயர்களிடம் விசுவாசம் கொண்டவர்களாலும் மாற்றத்தை விரும்பாதவர்களாலும் நிரம்பியிருந்தது. அவர்களில் சிலர் காந்தியை ‘தவறாக வழிநடத்தப்பட்ட மதக் கிறுக்கர்’ என்று கருதினார்கள். சம்பாரணில் காந்தி நுழைந்தபோது, அந்த மாவட்டத்தை விட்டு உடனடியாக அவர் வெளியேற வேண்டும் என்று காலனிய அதிகாரிகள் உத்தரவிட்டபோது காந்தி வெளியேற மறுத்தார் அல்லவா! அதற்குப் பிறகு குஜராத்தியர்கள் காந்தியை அணுகிய விதம் பெரிதும் மாறியது. வெளியேறும் உத்தரவை காந்தி மறுத்த செய்தி அகமதாபாத்தை வந்தடைந்தபோது “குஜராத் கிளப்பில் இருந்த வழக்கறிஞர்கள் துள்ளிக் குதித்தனர்,” அதுமட்டுமல்லாமல் இந்த ‘தீரரை’ தங்கள் சபாவின் அடுத்த தலைவராக ஆக்கவும் முடிவுசெய்தார்கள்.

லண்டனிலிருந்து திரும்பிய பாரிஸ்டரான வல்லபபாய் படேல் 1917-ல் குஜராத் கிளப்பின் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தார். சம்பாரணிலிருந்து வெளியேற வேண்டுமென்று போடப்பட்ட உத்தரவை காந்தி மதிக்காதது குறித்த செய்தி வந்தடைந்தபோது, அந்த கிளப்பில் படேல் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். கூடிய விரைவிலேயே, காந்தியுடன் சேர்ந்துகொள்வதற்காகத் தனது வெற்றிகரமான வழக்கறிஞர் தொழிலை அவர் விட்டுவிட்டார். மகாதேவ் தேசாய், நர்ஹரி பாரிக் ஆகிய இரண்டு குஜராத்தி வழக்கறிஞர்களும் 1917-ன் பிற்பகுதியில் காந்தியுடன் சேர்ந்துகொண்டார்கள். படேலைப் போலவே, இந்த இருவரும் காந்தியின் தேசிய, சமூக புத்தாக்கச் செயல்திட்டங்களில் பிரிக்க முடியாத அங்கங்களானார்கள்.

ஐந்தாவதாக, சம்பாரணில் காந்தி தங்கியதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக பிரிட்டிஷ் அரசின் அதிகாரத் தரப்பைச் சீராகவும் தொடர்ச்சியாகவும் எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அடிக்கடி அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்புகளில் பெரும்பாலானவை மோசமான அனுபவங்கள்! இப்போது இந்தியாவில் அதுபோன்ற அனுபவம் அவருக்குக் கிடைக்கிறது. மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுடனும், கமிஷனருடனும் பிஹாரின் துணைநிலை ஆளுநருடனும் தொடர்ச்சியான சந்திப்புகள் நிகழ்ந்தன. (அவற்றில் எல்லா சந்திப்புகளையும் இனிமையானவை என்று கருதிவிட முடியாது).

1917 ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் காந்தி முன்வைத்த விவசாயிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய சாட்சிகளைப் பார்த்துவிட்டு, பிஹார் அரசு ‘சம்பாரண் விவசாயப் பிரச்சினைகளுக்கான விசாரணைக் குழு’வை அமைத்தது. அதில் ஏழு உறுப்பினர்கள் இருந்தார்கள். நான்கு ஐசிஎஸ் அதிகாரிகளும் காந்தியும் அந்தக் குழுவில் உள்ளடக்கம். மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார். இந்தக் குழுவின் கூட்டங்கள் மூலமாக காலனிய அரசு குறித்த காந்தியின் அறிவு ஆழமானது. அதற்கு முன்புவரை இந்தியாவில் ஆங்கிலேய அரசின் இயங்குமுறை குறித்து அவர் மிகவும் சொற்பமாகவே அறிந்திருந்தார்.

காந்தி மகாராஜாவுக்கு ஜே!
இறுதியாக, சம்பாரணில் ஆற்றிய பணிதான் விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் இன்னும் பல்வேறு தரப்பினர் என்று விரிந்திருந்த இந்தியச் சமூகத்தின் அனைத்துத் தரப்பின் இதயங்களையும் சிந்தனைகளையும் கவர்ந்திழுப்பதற்கான தன்னம்பிக்கையை காந்திக்குத் தந்தது. சம்பாரணுக்கு அவர் வந்ததுமே காந்தி மீது அங்குள்ள விவசாயிகள் நம்பிக்கை கொண்டார்கள் என்பது பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சில மாதங்கள் கழித்து 1917, அக்டோபர் 3 அன்று ‘சம்பாரண் விவசாயப் பிரச்சினைகளுக்கான விசாரணைக் குழு’ தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. பெரும்பாலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்களே அந்த அறிக்கையில் இருந்தன. அதனை அடுத்து மோத்திஹரிக்குச் சென்ற காந்தி அங்கே ஒரு வாரம் தங்குகிறார். அங்கிருந்து பேத்தையாவுக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு அகமதாபாத்துக்குத் திரும்புவதாகத் திட்டம். பேத்தையா ரயில் நிலையத்தில் சுமார் 4,000 பேர் கூடியிருந்து அவரை வரவேற்றார்கள். 

ரகசிய போலீஸ்காரர் ஒருவர் இது குறித்துத் தனது குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘ரயில் நின்றதுதான் தாமதம்.. அங்குள்ள மக்களெல்லாம் ‘காந்திக்கு ஜே’, ‘காந்தி மகாராஜாவுக்கு ஜே’ என்று வாழ்த்தொலி முழங்க ஆரம்பித்துவிட்டார்கள். பேண்டு வாத்தியக் குழுக்களும் கொடிகளும் அங்கே காணப்பட்டன. அருகிலும் தூரத்திலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள், வழக்குரைஞர்கள் உட்பட எல்லோரும் அங்கே குழுமியிருந்தார்கள். காந்தி மீது மலர்களைத் தூவினார்கள். மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தார்கள். ரயில் நடைமேடையில் மிஸ்டர் காந்திக்காகச் சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள். பேத்தையாவைச் சேர்ந்த சுராஜ்மால் மார்வாரி என்பவர் தனது குதிரை வண்டியையும் பூரண் பாபு ராஜ் என்ற பொறியாளரின் குதிரையையும் கொண்டுவந்து, வண்டியைத் தயாராக வைத்திருந்தார். தனது குதிரையை பூரண் பாபு ஏன் இரவல் கொடுத்தார் என்பதும் ரயில் நிலையத்தில் இவ்வளவு கூட்டம் கூடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் ஏன் அனுமதித்தார்கள் என்பதும் புரியவில்லை.”

பேத்தையா ரயில் நிலையத்தில் காந்திக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பே இந்தியாவில் அவரது முதல் போராட்டம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை உணர்த்தியது. சம்பாரணின் விவசாயிகளும், அந்த மாவட்டத்தின் நடுத்தர மக்களும்கூட, தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள். சம்பாரணில் காந்தியின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்றால், அந்தப் பிரதேசத்தை விட்டு அவர் சென்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முஸாஃபர்பூருக்கு வந்திருந்த அதிகாரி ஒருவர் “மிஸ்டர் காந்தியின் பெயர் இன்றளவும் மிகுந்த மதிப்புக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

சம்பாரண் விவசாயிகள் காந்திக்கு நிறைய கடன்பட்டிருந்தார்கள். ஆனால், அதைவிட அதிகமாக காந்தி அவர்களுக்குக் கடன்பட்டிருந்தார். அவர்களுக்காகப் பணியாற்றியபோதுதான் இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொண்ட இன்னல்களைப் பற்றி அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அங்கேதான் அவரது தொடக்க கால அரசியல் சகாக்களை, நம்பிக்கையான நண்பர்களைச் சந்தித்தார். தனது சாதி, சமூகம், வர்க்கம், மதம் போன்றவற்றைச் சாராதவர்களையும் தன்னால் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு அங்கேதான் கிடைத்தது. வடக்கு பிஹாரில் 1917-ன் வசந்த காலத்திலும் கோடையிலும் அவர் செலவழித்த வாரங்களும் மாதங்களும்தான் எதிர்காலத்தில் அவர் எதிர்கொள்ளவிருந்த மேலும் கடினமான போராட்டங்களுக்காக அவரைத் தயார்படுத்தின.

சம்பாரண் என்பது இந்தியாவில் காந்தியின் முதல் அரசியல் அனுபவம் மட்டுமல்ல; காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. ஆகவே, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் இன்றியமையாதது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையரே வெளியேறுக, இறுதியில் அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை முதலானவற்றை நோக்கிய பாதையில் எடுத்து வைக்கப்பட்ட மிக முக்கியமான முதல் காலடிதான் சம்பாரண் போராட்டம்!
- ராமசந்திர குஹா, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

Sunday, April 16, 2017

இந்த உலகத்தில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது






சார்லி சாப்ளின்



(சார்லி சாப்ளினின்  பிறந்த நாளை முன்னிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதி இந்துநாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான சாப்ளினின் உரை)



மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக இருக்க விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன். யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான்.   நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை. இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.



தொலைத்துவிட்ட பாதை

வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகாகவும் இருக்க முடியும், ஆனால் அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம், ஆனால் நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம் மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே. புத்திசாலித்தனத்தை விட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும், அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.   



கண்டுபிடிப்புகளின் அடிப்படை

விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே. இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களை சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இத்தருணத்தில் சென்றடைகிறது.



சுதந்திரம் ஒருபோதும் அழியாது

நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறோன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது, மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.  



நீங்கள் இயந்திரங்கள் அல்ல

போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள். உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள், இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள்தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல! நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல! நீங்கள் மனிதர்கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள்- நேசிக்கப்படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!  



கடவுளின் சாம்ராஜ்யம்

17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: "கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது." ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக்குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக்குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக்குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்திஇயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி. மகிழ்ச்சியை உருவாக்குவதற்கான சக்தி! இந்த வாழ்க்கையை சுதந்திரமானதாகவும் அழகாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.



புதியதோர் உலகைப் படைப்போம்!

அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம். இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது

சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள், ஆனால் மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப்பையும் சகிப்பின்மையையும்  குழிதோண்டிப் புதைக்கவும் நாமெல்லோரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம் புதிய உலகைப் படைக்க. அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக நாமெல்லோரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம்!

    (ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ' கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.) தமிழில்: ஆசை





சாப்பி என்கிற சாப்ளின்



ஆசை

(மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, பிரசுரமாகாத கட்டுரை. சாப்ளின் பிறந்த நாளான இன்று பகிர்ந்துகொள்கிறேன்)

1.
சாப்ளினை உங்களுக்கு எப்போதிலிருந்து தெரியும் என்று யாராவது கேட்டால் துல்லியமாக சொல்ல முடியாத அளவுக்கு நம்முடைய நினைவுகளின் ஆரம்ப காலத்திலேயே நம்முள் கலந்துவிட்டவர் அவர்சிறு வயதில் சாப்ளின் எப்போது பார்த்தேன் என்பது எனக்கு நினைவில்லைபதின்பருவத்தின் துவக்கத்தில் வீட்டில் டி.விவாங்கியபோது ராஜ் டி.வியில் ஒளிபரப்பப்பட்ட சாப்ளின் நகைச்சுவைத் துணுக்குகளை நிறைய பார்ப்பேன்அவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்ற கருத்துத்தான் எனக்குள் அப்போது இருந்ததுஆனாலும்அவரை உயர்ந்த கலைஞராக நான் கருதுவதற்கான சந்தர்ப்பம் சென்னைக்கு வந்த பிறகு எம்.படித்தபோதுதான் எனக்குக் கிடைத்தது

மகத்தான பரிசு
அன்று எனக்குப் பிறந்த நாள்வழக்கமாகஎனது எல்லாப் பிறந்த நாள்களைப் போலவும் கழிவிரக்கத்துடனே தொடங்கியது அந்த நாள்பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்றாலும் நம் பிறந்த நாளைக் கொண்டாட யாருமே இல்லையே என்ற  கழிவிரக்கம்அன்றுதான் என்னுடைய பிறந்த நாள் என்று என்னுடன் படித்துக்கொண்டிருந்த கல்லூரி நண்பனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. "வாஎங்க அக்கா வீட்டுக்குப் போகலாம்என்று அழைத்துக்கொண்டு போனான்அங்கேவடைபாயசம் சாம்பாருடன் மதியம் விருந்துசாப்பிட்டு முடித்தவுடன் வி.சி.டிபிளேயரில் படம் போட்டான்சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்'. சாப்ளினை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு அது கண்ணைத் திறந்துவிட்டதுஎப்பேர்ப்பட்ட கலைஞராக இருந்திருக்கிறார் அந்த ஆள் என்று அசந்துபோய்விட்டேன்படம் பார்த்து முடித்தபோது என் நண்பனிடம் சொன்னேன், "எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு சாப்ளின்தான்என்றேன்இன்றைக்கு 12 ஆண்டுகள் கழிந்துவிட்டனஇன்றும் அந்தப் பரிசுதான் மகத்தான பரிசாக இருக்கிறது.

கழிவிரக்கத்தின் கலைஞன்
என்னையும் சாப்ளினையும் ஆழமாகக் கட்டிப்போட்டது கழிவிரக்கமே என்று எனக்குத் தோன்றுகிறதுகழிவிரக்கத்தை அசட்டுத்தனமான மிகையுணர்ச்சியாக ஆக்கிவிடாமல் கலையாக ஆக்கியவர் சாப்ளின். 'சிட்டி லைட்ஸ்படத்தின் இறுதிக் காட்சி இதற்கு உதாரணம்கழிவிரக்கம் என்பது நமக்கு ஒரு வகையில் ஆறுதல் தருவதுபெருமூச்சை வெளிப்படச் செய்வதுஅதை சாப்ளின் திரையில் பிரதிபலிக்கும்போது நாம் நெகிழ்ந்துபோகிறோம்.  நாமெல்லாம் கழிவிரக்கத்தோடு நின்றுவிடுவோம்ஆனால்கழிவிரக்கத்தை நம்பிக்கையை நோக்கி எடுத்துச்செல்கிறார் சாப்ளின்.

தீர்க்கதரிசி சாப்ளின்
அப்புறம் சாப்ளின் வேட்டை தொடங்கினேன். 'மாடர்ன் டைம்ஸ்பார்த்துவிட்டு சாப்ளின் கலைஞன் மட்டுமல்ல தீர்க்கதரிசியும் என்பதை உணர்ந்தேன்இயந்திரமயமாதல்முதலாளித்துவம் ஆகியவற்றின் கொடுமையை இதைவிட யாரால் அழகாகச் சொல்ல முடியும்தொழிலாளி சாப்பாட்டுக்குப் போகும் நேரத்தையும் மிச்சப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம் என்ற நோக்கத்தில் உணவு ஊட்டும் இயந்திரமொன்றை தொழிலாளி ஒருவரிடம் (சாப்ளின்வெள்ளோட்டம் விடுகிறார் முதலாளிஅது சரிவர இயங்காமல்போய் சாப்ளினைத் துவம்சம் செய்துவிட அவருக்கு மனநிலை பிறழ்ந்துவிடுகிறதுஅதுமட்டுமல்லாமல் சிசிடிவி போன்ற கண்காணிப்பு அமைப்பின் மூலமாக எப்போதும் தொழிலாளிகளைக் கண்காணிக்கும் அந்த முதலாளி இன்றைய முதலாளிகளுக்கெல்லாம் ஒரு முன்னோடிமேலும்வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கன்வேயர் பெல்ட்டில் இயந்திர பாகங்களை வேகவேகமாகத் திருகித் திருகிவேலை பார்க்காத நேரத்திலும் கைகள் அதே போல் இழுக்கும் நிலைக்கு ஆளாகும் தொழிலாளி இன்றைய தொழிலாளிகளுக்கெல்லாம் ஒரு முன்னோடித் தொழிலாளிமுதலாளித்துவத்தில் ஊறிய அமெரிக்காவால் இந்தத் திரைப்படத்தை அன்று ஜீரணிக்க முடியவில்லை என்பதில் ஆச்சர்யமில்லைஆனால்இன்று பார்க்கும்போது இன்னும் அர்த்தம் பொருந்தியதாக இருக்கிறது இந்தப் படம்.

காலியான 'சர்க்கஸ்மைதானம்
'சர்க்கஸ்படமும் முக்கியமான ஒன்றுஇறுதிக் காட்சியில் தன் காதலியையும் அவளுடைய கணவனையும் வழியனுப்பிவிட்டு சர்க்கஸ் கூடாரம் காலியான இடத்தில் சாப்ளின் சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்சர்க்கஸின் மிச்சமாக இருக்கும் கிழிந்த காகிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கசக்கிச் சுருட்டுவார். (அது சர்க்கஸின் மிச்சம் மட்டுமல்ல அவருடைய காதலின் மிச்சமாகவும் இருக்கலாம்.) சற்று நேரத்தில் எழுந்துசுருட்டிய காகிதத்தைத் தன்னுடைய பாணியில் பின்னங்காலால் உதைத்துவிட்டு நடைபோட ஆரம்பிப்பார்காலியான சர்க்கஸ் மைதானத்தைபார்வையாளருடைய இதயத்துக்கு இடம் மாற்றிவிடுவதுதான் சாப்ளினுடைய கலை.

2.
'சாப்பி'யாக மாறியவர்
12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான சாப்ளின் நினைவின் ஒரு ஓரத்தில்தான் இருந்துகொண்டிருந்தார்அவரை எனது வாழ்வின் இன்றியமையாத பகுதியாக ஆக்கியது இரண்டு வயதுகூட ஆகாத என்னுடைய மகன்தான்அவனுக்குச் சாப்பாடு ஊட்டுவது என்பது பெரிய சர்க்கஸ் விளையாட்டுநல்லவேளை சாப்ளின் துணைக்கு வந்தார்போகப்போக மற்ற நேரங்களிலும் சாப்ளின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தான்இப்போதெல்லாம் காலை எழுந்தவுடன் அப்பா 'சாப்பிஎன்று என் மடிக்கணினியை நோக்கிக் கையை நீட்டுவான். ('சாப்ளின்என்று சொல்ல வராமல் அவன் வைத்த பெயர்தான் 'சாப்பி').  படத்தைப் போட்டால்தான் ஆயிற்று, இல்லையென்றால் மடிக்கணினி போய்விடும்இப்படியாக அவனுக்கு நினைவுக்கு வரும் நேரமெல்லாம் சாப்ளின் படங்களைப் போட்டாக வேண்டும்முக்கியமாக, 'சர்க்கஸ்', 'மாடர்ன் டைம்ஸ்படங்களைத்தான் அவன் விரும்பிப் பார்ப்பான்பேச ஆரம்பித்துவிட்ட 'சாப்பி' (தி கிரேட் டிக்டேட்டர்அவனுக்கு 'னானாம்'. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவனுக்காகப் படத்தைப் போட்டாலும்கூட வேறு வேலையாக இருக்கும் நானும் என் மனைவியும் கூட பல நேரங்களில் அவனுடன் சேர்ந்துகொள்வோம்ஏதோ புதிதாகப் பார்ப்பதுபோல சாப்ளினில் மூழ்கிவிடுவோம்நூற்றுக்கும் மேற்பட்ட தடவை பார்த்தும்கூட சாப்ளின் கொஞ்சம்கூட அலுக்கவில்லைஇப்படியே போய்க்கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் கண்டுபிடித்தேன்சாப்ளினுக்கும் என்னுடைய பையனுக்கும் பிறந்த நாள் ஒன்று என்பதை

'காலம் எனக்குப் பெரிய எதிரிஎன்றார் சாப்ளின்ஆனால்கடந்த நூறு ஆண்டுகளாகப் புதுமை குறையாமல் பல தலைமுறைகளை உற்சாகப்படுத்திய பின்னும் புதிதாக வரும் தலைமுறைகளையும் மயக்கிக்கொண்டுதான் இருக்கிறார் சாப்ளின்தான் ஒரு குழந்தை என்பதை சாப்ளின் தனது திரைப்படங்களில் உணர்த்தியிருப்பதைப் போலஒவ்வொரு குழந்தையும் சாப்ளின்தான் என்பதை சாப்ளினின் குட்டி ரசிகன் ஒருவன் எனக்கு உணர்த்துகிறான். 'சாப்பிஎன்ற சாப்ளினின் பிறந்த நாளை அவருடைய குட்டி ரசிகனின் தந்தையாக நான் கொண்டாடித்தான் ஆக வேண்டும்.