Tuesday, March 18, 2025

கருப்பையாதல்


என் கரம் சிரம்
குறி கண் உயர்த்தி
தவம் செய்கிறேன்
ஒரு கருப்பை
என்னுள் முளைத்திட
ஒரு கருப்பையாய்
நான் ஆகிட
உயர்த்தியது
அனைத்தும்
தாழும்போதும்
வீழும்போதும்
தேயும்போதும்
ஓயும்போதும்
கருப்பை முளைக்கிறது
அனைவருமே
கருப்பையாய்த்தான்
சாகிறோம்
-ஆசை

No comments:

Post a Comment