எங்கள் பரதனும்
அப்படித்தான்
கிடைத்த ஆட்சியில்
ராமனின் பாதுகைகளை
சிம்மாசனத்தில் வைத்து
ஆள்பவன்
எங்கள் இலக்குவனும்
கூட இருந்து
ஆட்சி சுகத்தை
அனுபவிக்கும் நிலை விட்டு
அண்ணனோடு
வனவாசம் சென்றவன்
எங்கள் சீதையோ
வனவாசம்
சிறைவாசம்
பின்
அக்கினி பிரவேசம்
எங்கள் ராவணன்
ராமனுக்கு இணையாய்
நாயகன்
தங்கைக்காகப்
பழிவாங்கத் துடித்துப்
பத்துத் தலையும்
மொத்த நாட்டையும்
இழந்தான்
எங்கள் ராமாயணமோ
அதிகாரத்தை துறக்கிறது
உங்கள் ஆட்சியோ
ராமாயணத்தை
சிம்மாசனத்தில் சுமக்கிறது
அது எல்லோர்க்கும்
வனவாசம்
சிறைவாசம்
அக்னிப் பிரவேசம்
விதிக்கிறது
-ஆசை
கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:
3. TENET

No comments:
Post a Comment