-ஆசை
Thursday, February 27, 2025
நாளை காப்பாற்றலாம்
Wednesday, February 26, 2025
பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது! - பொருளியலாளர் ஜெயரஞ்சன் பேட்டி
ஆசை
பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...
தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?
ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.
Tuesday, February 25, 2025
மன்னார்குடி உங்களை வரவேற்கிறது ஞானக்கூத்தன்! - மாயக்குடமுருட்டி காவியத்திலிருந்து...
ஆசை
வணக்கம் ஞானக்கூத்தன்
மன்னார்குடி உங்களை வரவேற்கிறது
நீங்கள் பிறந்த திருஇந்தளூர் சென்றுவிட்டு
கும்பகோணம் வழியே
மன்னார்குடி வந்திருக்கிறீர்கள்
நன்றி
பாரம்பரிய மிக்க ஊர் இது
Monday, February 24, 2025
அதிகம் நம்மைக் கொல்லும்!
ஆசை
முதன்முதலில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது என்னை மலைக்கவைத்த, பயமுறுத்திய விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கூட்டம், வாகனங்கள், கட்டிடங்கள், கடைகள், கடைகளில் உள்ள பொருட்கள் என்று எதையெடுத்தாலும் மிதமிஞ்சிக் காணப்பட்ட நிலைதான். முதன்முதலில் சென்னைக்கு வந்து சட்டை, பேண்ட் எடுக்கப்போனபோது சரவணா ஸ்டோரைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது. என்னுடைய அளவுக்கு நல்ல பேண்ட் வேண்டும் என்று கேட்டபோது வகைவகையாக என்னென்னவோ எடுத்துப் போட்டார்கள். ஊரில் இருந்தவரை எனக்குத் தெரிந்தது இரண்டுதான், ஒன்று சாதா பேண்ட். இன்னொன்று ஜீன்ஸ் பேண்ட். ஒரு பேண்ட் கேட்டதற்கு என் முன்னால் மலைபோல் குவித்துப் போட்டதும் எனக்கு எதை எடுப்பது என்று தெரியாமல் சங்கடத்துடன் நின்றேன்.
Saturday, February 22, 2025
பாவென்று அழையுங்களேன் பாபுஜி! - கஸ்தூர்பா காந்தி நினைவுநாள் கவிதை
இன்று கஸ்தூர்பா காந்தியின் நினைவு நாள். எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Friday, February 21, 2025
ஆக்டேவியோ பாஸ் கவிதைகள்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆக்டேவியா பாஸின் ஆறு கவிதைகள்
1. விடியற்பொழுது
குளிர்ந்த விரைவான கரங்கள்
உருவிக்கொள்கின்றன
இருளின் கட்டுத்துணியை
ஒவ்வொன்றாக
நான் கண் திறந்து பார்க்கிறேன்
இப்போதும்
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் புதிதாக இருக்கும்
ஒரு காயத்தின் மத்தியில்
Thursday, February 20, 2025
மலேசியா வாசுதேவன் நினைவாக ஒரு கவிதை
இன்று மலேசியா வாசுதேவனின் நினைவு நாள். எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர். எனது ‘குவாண்டம் செல்ஃபி’ கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையை அவரது ‘வா வா வசந்தமே’ என்ற பாடலுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பாடலில் வரும் ‘தேவமின்னல்’ என்ற சொல்லால் உந்தப்பட்டு எழுதிய கவிதை அது. அந்தக் கவிதை இங்கே:
Wednesday, February 19, 2025
Tuesday, February 18, 2025
பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்கள்
Monday, February 17, 2025
கொஞ்சமாய் ஏமாந்துதான் பாரேன்
Saturday, February 15, 2025
இருவேறு உலகத்து ஒரே மலர்
Friday, February 14, 2025
Thursday, February 13, 2025
காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!
Thursday, February 6, 2025
பெண்குஞ்சு
ஒன்றாய்க் குளித்துவிட்டு அம்மணங்குண்டியாக ஓடி வருகிறார்கள் அண்ணனும் தங்கையும் ‘அப்பா’ என்று கூவியபடி
Tuesday, February 4, 2025
சூரியன் எதைச் சுற்றுகிறது?
ஆசை
சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.
படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார்.
Monday, February 3, 2025
முதலறியான்
Saturday, February 1, 2025
கன்னடத்தில் என் கவிதை
எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.