உலகம் அழிப்பேன் நான்
உன்மத்தம் திறப்பேன் நான்
பாதிப் பிறப்பைச் சுமந்து
மீதிப் பிறப்பைத் தேடுவேன் நான்
உடலுக்குள்ளே நீச்சலடித்து
ஒதுங்கியேறிச் செல்வேன் நான்
புள்ளியதைத் தாண்டிச் சென்று
புள்ளினமாய் வருவேன் நான்
-ஆசை, ‘அண்டங்காளி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...
No comments:
Post a Comment