வாழ்க்கை என்றால்
என்ன
அதன் மறுமுனையை
ஒரு பிணம்
கொறித்துக்கொண்டே வருகிறது
யாரும் நகர வேண்டியதில்லை
அதுவே வந்துவிடும்
அவன் மட்டுமே
கலந்துகொள்ளும் போட்டியென்றாலும்
ஒவ்வொரு முறையும்
அவனே சாம்பியனாக வேண்டிய
கட்டாயத்தில்
அலுத்துப்போய்
முன்பு வென்ற கோப்பையில்
விஷமருந்தி
இதோ இறந்து கிடக்கிறான்
முந்நூறு முறை கோப்பை வென்றவன்
அவன் கைவிட்ட நினைவுகள்
அவனைத் தூக்கிச் செல்ல
ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன
வாழ்க்கை
எவ்வளவு இனியதொரு
பிண அனுபவம்
ஆடாமல் அசையாமல்
அப்படியே இருந்தால் போதும்
சுமந்து செல்பவர்களின்
கொண்டாட்டத்தைப் பாருங்கள்
-ஆசை
No comments:
Post a Comment