மேலே வெயில் வானம்
கருப்பிலிருந்து
கருநீலத்துக்குப்
பறக்கிறது
ஒரு பறவை
மேற்கு மலைத்தொடரின்
பறக்கும் சிகரமொன்றில்
வழியும் கருநீலத்தின்
அருவி அது
வெயிலின் குழந்தையந்தக்
கருநீலம்
கருமையாய் சுருண்டு கிடக்கிறது
வெயில் தொடும்வரை
வெயில் தொடத் தொடக்
குழைகிறது நாய்க்குட்டியாய்
அந்தக் கருநீலம்
செல்லுமிடமெல்லாம்
செல்கிறது
உள்ளுக்குள்
ஒரு கருநீலத் தனிமை
ஓரிடம் நிற்கிறது
அந்தப் பறவை
ஒரு நொடி தாமதிக்கிறது
உடலின் கருநீலத்திலிருந்து
குரலின் கருநீலம் நோக்கி
இப்போது பறக்கிறது
ஒரு பறவை
இக்கவிதையைப் படிக்கும்போது குழந்தையாகிப்போன உணர்வு.
ReplyDelete