Saturday, May 18, 2013

ஜப்பானிய ஹைக்கூ


புத்தனிடமிருந்து திரும்பிக்கொள்கிறேன்  
எவ்வளவு குளுமை
நிலவொளி
 
                 -
 ஷிகி
இந்தக் குளுமை
ஊசியிலை மரத்தில் மழை நேரத்தில்
ஏறிக்கொண்டிருக்கும் ஒரு நண்டு
 
                    
-ஷிகி

தொங்கு பாலத்துக்கு மேலே
குழம்பிப்போய்
ஜில்லென்ற மழை தாரைகள்

                         
ஷிகி
பெரும் புத்தர்
அதன்
இரக்கமற்ற குளிர்
 
                       -
 ஷிகி

கோடைத் தூறல்! 
எத்தனை வேலைக்காரர்கள்
கதவைச் சாத்திக்கொண்டு!

                   
 
ஷிகி
ஆங்கிலம்வழி தமிழ் மொழிபெயர்ப்பு: ஆசை.
 (ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ப்ளைத். 'ஹைக்கூ' என்ற பெயரில் நான்கு தொகுப்புகளாக இவர் வெளியிட்ட நூல் ஜப்பானிய ஹைக்கூவுக்கு உலகப் புகழைத் தேடித் தந்தது.)
(தமிழ் இன்று இணைய இதழில் 2010இல் வெளிவந்த மொழிபெயர்ப்பு)

No comments:

Post a Comment