Friday, March 28, 2025

பெயர்களின் பயனின்மை


உனக்குப் பெயர்கள் ஓராயிரம்
ஓராயிரம் மொழிகளில்
இருந்தும் உனக்குத் தெரியாது
உன்னுடைய பெயர்
என்னவென்று
பெயர் தெரிந்து என்ன பயன்?
உன்னுள் கிடையாது
உனக்கென்று ஒரு பெயர்
எனக்குத் தெரியும்
என்னுள்ளும் கிடையாது
எனக்கென்றொரு பெயர்
நீ வரும்போதெல்லாம்
என்மேல் படிந்திருக்கும் பெயரை
உறிஞ்சிக் குடித்துவிட
நாமிருவரும் ஒன்றாகிறோம்
ஏற்கெனவே நாம்
ஒன்றாயிருப்பதுபோலவே
-ஆசை, ‘கொண்டலாத்தி’ (2010) கவிதைத் தொகுப்பிலிருந்து...

No comments:

Post a Comment