Thursday, January 25, 2024

தனிச்சிறு மீன்கள்



அருட்பெரும் உடல்
தனிப்பெரும் உயிர்

அருட்பெரும் ஆழி
தனிப்பெரும் கப்பல்

அருட்பெரும் அந்தம்
தனிப்பெரும் பாழ்

தனிப்பெரும் பாழ்
அங்கிருந்தே வெறிக்கிறது

அருட்பெரும் உடலின்
தனிப்பெரும் உயிர்
அதை இங்கிருந்தே
உணர்கிறது
இங்கிருந்து
அதை நோக்கித் 
துடிக்கிறது

அத்திசையில்
அருட்பெரும் ஆழியின்
தனிப்பெரும் கப்பல்
செலுத்துகிறது

அருட்பெரும் வழியெல்லாம்
தனிச்சிறு மீன்கள்
தனிப்பெரும் கப்பலைக்
கொறித்துக் கொறித்துத்
தின்னும்

பாழடைந்த கப்பலே
பாழடையும்
     -ஆசை

No comments:

Post a Comment