Monday, February 6, 2017

யோனி இட்ட தீ



முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே
யோனி இட்ட தீ அடிவயிற்றிலே
               வேக வேக வேகவே

கீழ்விந்து ஒரு திசை பாயும்
மேல்விந்து பல திசை பாயும்
ஊழ்விந்து உடனிருக்கும் எப்போதும்
               மூழ்க மூழ்க மூழ்கவே

பெண்யோனி எதிர்க்குறி புணரும்
கண்யோனி தன்குறி புணரும்
மண்யோனி உடல் இடும் வரையும்
              சாக சாக சாகவே

முன்னுடல் பெண்குறியாகும்
தன்னுடல் தன்குறியாகும்
கொன்றுடல் தின்றிடுமே
             மாய்க மாய்க மாய்கவே

சொட்டும் விந்து தீராது
சொட்டிச் சொட்டி ஓயாது
சொட்டு விந்து கொல்லுதே
              தீர்க தீர்க தீர்கவே

துளையென்றும் இலையது உயிரென்றும்
துளைத்தெடுக்கும் மனம்பாராது
துளைசேரக் கொல்லும் விந்து
             தீர்க்க தீர்க்க தீர்க்கவே

பொறிடங்கும் வரை
குறி விறைப்படங்காமல்
பொறியதைக் கொறித்திடுமே
            தேய்க்க தேய்க்க தேய்க்கவே

கால்முதல் மேல்வரை உடுத்திக்
காலது மேலது எனினும்
காலும்மேலும் யோனிகாண் மனமே
           சாய்க்க சாய்க்க சாய்க்கவே

ஊன்றும்வரை இன்பம்
ஊன்றித் தீரா இன்பம்
ஊன்றி ஊன்றிப் புதைக்கும்
          தீய்க்க தீய்க்க தீய்க்கவே

துளிவிந்து உலகு விரிக்கும்
துளிவிந்து உலகு மறைக்கும்
துளியடங்க உலகு தோன்றும்
         தூர்க்க தூர்க்க தூர்க்கவே
     

No comments:

Post a Comment