Monday, February 20, 2017

குற்றவுணர்ச்சியின் ஆணுறை



வெட்கமாக இருக்கிறது
ஆயினும் இன்பமாகத்தான் இருக்கிறது

கடந்து செல்லும் பெண்ணைத்
தடவச் சொல்லி
வருடச் சொல்லித்
தூண்டுகிறது குற்றம்

தடவ வேண்டாம்
வருட வேண்டாம்
கடக்கையில்
தானாய் வருடல்
நிகழும் வண்ணம்
நின்றுகொள் என்கிறது
குற்றவுணர்ச்சி

பார்க்கச் சொல்லித்
துழாவச் சொல்லித்
தள்ளுகிறது
குற்றம்

தலைத்திசை
கண்திசை வேறு பக்கம் செலுத்திக்
குறித்திசை பொருத்தென்கிறது
குற்றவுணர்ச்சி

உறுப்பெடுத்து
உரசச் சொல்லி
அரியாய் அரிக்கிறது
குற்றம்

கடப்பவளின் கண்ணியமல்ல
உறுப்புடையான் கண்ணியம் காத்து
உறுப்படக்கிச் செருப்படி தவிர்க்கச் சொல்லும்
குற்றவுணர்ச்சி


குற்றம் யோனிசூட்ட
குற்றவுணர்ச்சி ஆணுறைசூட்ட
வெட்கமாக இருக்கிறது
ஆயினும் இன்பமாகத்தான் இருக்கிறது

No comments:

Post a Comment