Sunday, April 16, 2017

சாப்பி என்கிற சாப்ளின்



ஆசை

(மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, பிரசுரமாகாத கட்டுரை. சாப்ளின் பிறந்த நாளான இன்று பகிர்ந்துகொள்கிறேன்)

1.
சாப்ளினை உங்களுக்கு எப்போதிலிருந்து தெரியும் என்று யாராவது கேட்டால் துல்லியமாக சொல்ல முடியாத அளவுக்கு நம்முடைய நினைவுகளின் ஆரம்ப காலத்திலேயே நம்முள் கலந்துவிட்டவர் அவர்சிறு வயதில் சாப்ளின் எப்போது பார்த்தேன் என்பது எனக்கு நினைவில்லைபதின்பருவத்தின் துவக்கத்தில் வீட்டில் டி.விவாங்கியபோது ராஜ் டி.வியில் ஒளிபரப்பப்பட்ட சாப்ளின் நகைச்சுவைத் துணுக்குகளை நிறைய பார்ப்பேன்அவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்ற கருத்துத்தான் எனக்குள் அப்போது இருந்ததுஆனாலும்அவரை உயர்ந்த கலைஞராக நான் கருதுவதற்கான சந்தர்ப்பம் சென்னைக்கு வந்த பிறகு எம்.படித்தபோதுதான் எனக்குக் கிடைத்தது

மகத்தான பரிசு
அன்று எனக்குப் பிறந்த நாள்வழக்கமாகஎனது எல்லாப் பிறந்த நாள்களைப் போலவும் கழிவிரக்கத்துடனே தொடங்கியது அந்த நாள்பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்றாலும் நம் பிறந்த நாளைக் கொண்டாட யாருமே இல்லையே என்ற  கழிவிரக்கம்அன்றுதான் என்னுடைய பிறந்த நாள் என்று என்னுடன் படித்துக்கொண்டிருந்த கல்லூரி நண்பனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. "வாஎங்க அக்கா வீட்டுக்குப் போகலாம்என்று அழைத்துக்கொண்டு போனான்அங்கேவடைபாயசம் சாம்பாருடன் மதியம் விருந்துசாப்பிட்டு முடித்தவுடன் வி.சி.டிபிளேயரில் படம் போட்டான்சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்'. சாப்ளினை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு அது கண்ணைத் திறந்துவிட்டதுஎப்பேர்ப்பட்ட கலைஞராக இருந்திருக்கிறார் அந்த ஆள் என்று அசந்துபோய்விட்டேன்படம் பார்த்து முடித்தபோது என் நண்பனிடம் சொன்னேன், "எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு சாப்ளின்தான்என்றேன்இன்றைக்கு 12 ஆண்டுகள் கழிந்துவிட்டனஇன்றும் அந்தப் பரிசுதான் மகத்தான பரிசாக இருக்கிறது.

கழிவிரக்கத்தின் கலைஞன்
என்னையும் சாப்ளினையும் ஆழமாகக் கட்டிப்போட்டது கழிவிரக்கமே என்று எனக்குத் தோன்றுகிறதுகழிவிரக்கத்தை அசட்டுத்தனமான மிகையுணர்ச்சியாக ஆக்கிவிடாமல் கலையாக ஆக்கியவர் சாப்ளின். 'சிட்டி லைட்ஸ்படத்தின் இறுதிக் காட்சி இதற்கு உதாரணம்கழிவிரக்கம் என்பது நமக்கு ஒரு வகையில் ஆறுதல் தருவதுபெருமூச்சை வெளிப்படச் செய்வதுஅதை சாப்ளின் திரையில் பிரதிபலிக்கும்போது நாம் நெகிழ்ந்துபோகிறோம்.  நாமெல்லாம் கழிவிரக்கத்தோடு நின்றுவிடுவோம்ஆனால்கழிவிரக்கத்தை நம்பிக்கையை நோக்கி எடுத்துச்செல்கிறார் சாப்ளின்.

தீர்க்கதரிசி சாப்ளின்
அப்புறம் சாப்ளின் வேட்டை தொடங்கினேன். 'மாடர்ன் டைம்ஸ்பார்த்துவிட்டு சாப்ளின் கலைஞன் மட்டுமல்ல தீர்க்கதரிசியும் என்பதை உணர்ந்தேன்இயந்திரமயமாதல்முதலாளித்துவம் ஆகியவற்றின் கொடுமையை இதைவிட யாரால் அழகாகச் சொல்ல முடியும்தொழிலாளி சாப்பாட்டுக்குப் போகும் நேரத்தையும் மிச்சப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம் என்ற நோக்கத்தில் உணவு ஊட்டும் இயந்திரமொன்றை தொழிலாளி ஒருவரிடம் (சாப்ளின்வெள்ளோட்டம் விடுகிறார் முதலாளிஅது சரிவர இயங்காமல்போய் சாப்ளினைத் துவம்சம் செய்துவிட அவருக்கு மனநிலை பிறழ்ந்துவிடுகிறதுஅதுமட்டுமல்லாமல் சிசிடிவி போன்ற கண்காணிப்பு அமைப்பின் மூலமாக எப்போதும் தொழிலாளிகளைக் கண்காணிக்கும் அந்த முதலாளி இன்றைய முதலாளிகளுக்கெல்லாம் ஒரு முன்னோடிமேலும்வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கன்வேயர் பெல்ட்டில் இயந்திர பாகங்களை வேகவேகமாகத் திருகித் திருகிவேலை பார்க்காத நேரத்திலும் கைகள் அதே போல் இழுக்கும் நிலைக்கு ஆளாகும் தொழிலாளி இன்றைய தொழிலாளிகளுக்கெல்லாம் ஒரு முன்னோடித் தொழிலாளிமுதலாளித்துவத்தில் ஊறிய அமெரிக்காவால் இந்தத் திரைப்படத்தை அன்று ஜீரணிக்க முடியவில்லை என்பதில் ஆச்சர்யமில்லைஆனால்இன்று பார்க்கும்போது இன்னும் அர்த்தம் பொருந்தியதாக இருக்கிறது இந்தப் படம்.

காலியான 'சர்க்கஸ்மைதானம்
'சர்க்கஸ்படமும் முக்கியமான ஒன்றுஇறுதிக் காட்சியில் தன் காதலியையும் அவளுடைய கணவனையும் வழியனுப்பிவிட்டு சர்க்கஸ் கூடாரம் காலியான இடத்தில் சாப்ளின் சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்சர்க்கஸின் மிச்சமாக இருக்கும் கிழிந்த காகிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கசக்கிச் சுருட்டுவார். (அது சர்க்கஸின் மிச்சம் மட்டுமல்ல அவருடைய காதலின் மிச்சமாகவும் இருக்கலாம்.) சற்று நேரத்தில் எழுந்துசுருட்டிய காகிதத்தைத் தன்னுடைய பாணியில் பின்னங்காலால் உதைத்துவிட்டு நடைபோட ஆரம்பிப்பார்காலியான சர்க்கஸ் மைதானத்தைபார்வையாளருடைய இதயத்துக்கு இடம் மாற்றிவிடுவதுதான் சாப்ளினுடைய கலை.

2.
'சாப்பி'யாக மாறியவர்
12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான சாப்ளின் நினைவின் ஒரு ஓரத்தில்தான் இருந்துகொண்டிருந்தார்அவரை எனது வாழ்வின் இன்றியமையாத பகுதியாக ஆக்கியது இரண்டு வயதுகூட ஆகாத என்னுடைய மகன்தான்அவனுக்குச் சாப்பாடு ஊட்டுவது என்பது பெரிய சர்க்கஸ் விளையாட்டுநல்லவேளை சாப்ளின் துணைக்கு வந்தார்போகப்போக மற்ற நேரங்களிலும் சாப்ளின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தான்இப்போதெல்லாம் காலை எழுந்தவுடன் அப்பா 'சாப்பிஎன்று என் மடிக்கணினியை நோக்கிக் கையை நீட்டுவான். ('சாப்ளின்என்று சொல்ல வராமல் அவன் வைத்த பெயர்தான் 'சாப்பி').  படத்தைப் போட்டால்தான் ஆயிற்று, இல்லையென்றால் மடிக்கணினி போய்விடும்இப்படியாக அவனுக்கு நினைவுக்கு வரும் நேரமெல்லாம் சாப்ளின் படங்களைப் போட்டாக வேண்டும்முக்கியமாக, 'சர்க்கஸ்', 'மாடர்ன் டைம்ஸ்படங்களைத்தான் அவன் விரும்பிப் பார்ப்பான்பேச ஆரம்பித்துவிட்ட 'சாப்பி' (தி கிரேட் டிக்டேட்டர்அவனுக்கு 'னானாம்'. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவனுக்காகப் படத்தைப் போட்டாலும்கூட வேறு வேலையாக இருக்கும் நானும் என் மனைவியும் கூட பல நேரங்களில் அவனுடன் சேர்ந்துகொள்வோம்ஏதோ புதிதாகப் பார்ப்பதுபோல சாப்ளினில் மூழ்கிவிடுவோம்நூற்றுக்கும் மேற்பட்ட தடவை பார்த்தும்கூட சாப்ளின் கொஞ்சம்கூட அலுக்கவில்லைஇப்படியே போய்க்கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் கண்டுபிடித்தேன்சாப்ளினுக்கும் என்னுடைய பையனுக்கும் பிறந்த நாள் ஒன்று என்பதை

'காலம் எனக்குப் பெரிய எதிரிஎன்றார் சாப்ளின்ஆனால்கடந்த நூறு ஆண்டுகளாகப் புதுமை குறையாமல் பல தலைமுறைகளை உற்சாகப்படுத்திய பின்னும் புதிதாக வரும் தலைமுறைகளையும் மயக்கிக்கொண்டுதான் இருக்கிறார் சாப்ளின்தான் ஒரு குழந்தை என்பதை சாப்ளின் தனது திரைப்படங்களில் உணர்த்தியிருப்பதைப் போலஒவ்வொரு குழந்தையும் சாப்ளின்தான் என்பதை சாப்ளினின் குட்டி ரசிகன் ஒருவன் எனக்கு உணர்த்துகிறான். 'சாப்பிஎன்ற சாப்ளினின் பிறந்த நாளை அவருடைய குட்டி ரசிகனின் தந்தையாக நான் கொண்டாடித்தான் ஆக வேண்டும்.  

No comments:

Post a Comment