Saturday, February 18, 2017

மஞ்சள் நீக்கி

படம்: கேதார் பொட்னிஸ்

வெகுநாள் கழித்து
உன் தரிசனம்
இன்றெனக்கு

பட்டமர உச்சியில்
வெயில் விழுங்கி
ஒரு மஞ்சள் மிணுக்கம்

மாம்பழத்தெழில்
மஞ்சள் சிற்றுடல்

பருவத்தின் பெரும் பாதம்
பதிக்க
சிற்றுடலிலும்
ஓர் மஞ்சள் சிற்றிடம்

உயிர்
பருவம்
எழில்
கூடி
பட்டமரத்திலிருந்து
ஒரு மஞ்சள் பறத்தல்

உயிர்வலைப்பின்னலில்
மஞ்சள் நீக்கி
எழில் நீக்கி
பருவம் நீக்கி
பெயர் நீக்கி
பறத்தல் நீக்கி

  -18-02-2017

1 comment: