Thursday, February 2, 2017

காகச்சக்கரம்


படம்: ஆசை

அரைபட்டுத் தட்டையாகிக் கிடந்தது
நடுச்சாலையில்
பறவையின் உடலொன்று

உடலில்லை
வெறும் துணுக்கு
சப்பளித்த துணுக்கு

அற்புத வாகனங்களே
உம்மை நன்கு திருத்த
எத்தனையெத்தனை காகமும் மைனாவும்
குருவியும் பருந்தும்
ரத்தம் சொரிந்தனவோ
இப்பாரினிலே
    02-02-2017


No comments:

Post a Comment